MUSEUM OF SELFIES



அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் தொழிற்பகுதிக்கு வெளியே சுமார் 13 கிலோமீட்டரில் க்ளென்டே என்ற  இடத்தில் ‘The Museum of Selfies’ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதற்கு நுழைவு கட்டணம் 25 டாலர்.இங்கு சரித்திரம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல ஓவியங்கள், சிற்பங்கள், கலைப்பொருட்கள் என பல உண்டு.  அவற்றின் முன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். உலகின் சிறந்த செல்ஃபி படங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.  சுற்றிப் பார்க்க 60-90 நிமிடங்கள் ஆகும். 8500 சதுர அடியில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

* 1839ல் ஒரு அமெரிக்க விளக்கு தயாரிப்பாளர், அத்துடன் புகைப்பட கண்டுபிடிப்பிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது  கண்டுபிடித்த கருவியை அவர் இயக்கியபோது அது அவரையே புகைப்படம் எடுத்தது! இதுதான் உலகின் முதல்  செல்ஃபி.

* ஆஸ்திரேலிய ஆன்லைன் ஃபோரமில்தான் இன்றைய காலகட்டத்தின் முதல் செல்ஃபி வெளியானது.

* ஃபிலிக்கர்/மைஸ்பேஸ் போன்ற சோஷியல் மீடியா அமைப்புகள், செல்ஃபி என்ற வார்த்தையை அடிக்கடி  பயன்படுத்தின.

இதனால் ஆக்ஸ்போர்ட் அகராதி 2013ன் மிக அதிகம் பயன்படுத்திய சொல்லாக செல்ஃபியை தேர்ந்தெடுத்தது.

இனி செல்ஃபி பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்

* 2428571 செல்ஃபிகள் தினமும் சோஷியல் மீடியாவில் ‘அப்லோட்’ செய்யப்படுகிறது.
* அக்டோபர் மாதம்/2011ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு செப்டம்பர் வரை செல்ஃபியால் 358 சாவுகள் நிகழ்ந்துள்ளன.
* மொத்த போன்களில் 93 சதவிகித போன்களில் கேமரா உள்ளது.
* இன்று உலகில் 11 மில்லியன் கேமரா போன்கள் உள்ளன.
* 2014ல் தான் செல்ஃபி எடுப்பது படு சீரியஸான விஷயமாக மாறியது.
* அமெரிக்க சைக்யாட்ரிக் அசோசியேஷன் செல்ஃபி எடுப்பது மனக்குறையின் வெளிப்பாடு என அறிவிக்க  முயற்சித்தது.ஆனால் அறிவிக்கவில்லை.
- வைஷ்ணவி, பெங்களூரு.

- ஜெ. சதீஷ்