ப்ரியங்களுடன்..
எழுந்து நடக்க முடியாத பூர்ணிமாவின் துணிச்சல், தன்னம்பிக்கை, முயற்சி அளப்பரியது. பிரமிக்க வைக்கிறது. - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.
ஸ்ரீதேவி குறித்த ஜீவசுந்தரியின் கட்டுரை நெகிழ்ச்சி. ‘வணக்கத்துக்குரிய காதலிேய!’ திரைப்படம் மூலம் இரட்டை வேடம் ஏற்ற ஸ்ரீதேவியை பற்றி தெரிந்துகொண்டது மகிழ்ச்சி! - சு.நவீனா தாமு, பொன்னேரி.
காபி பிரியையான எனக்கு ‘காப்பியம்’ ஆர்வத்தைத் தூண்டியது. ‘வெளிநாடு போறீங்களா?’ வெளிநாடு செல்பவர்களுக்கு அருமையான ஆலோசனை தந்தது. எம்எஸ்ஜி எனும் விஷத்தின் பிரதி பிம்பத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை அறியத்தந்த ‘தோழி’க்கு நன்றிகள் பல. - எஸ்.வளர்மதி, கொட்டாரம், கன்னியாகுமரி.
 ‘ஸ்ரீதேவி’ பற்றிய நினைவு கூறல் பதிவு நெஞ்சைத் தொட்டது. - C.விஜயலட்சுமி, குண்டூர், திருச்சி.
‘பலியாகும் பெண்கள்...’ ஒவ்வொரு குடும்பத்தாரும் வாசிக்க வேண்டிய விழிப்புணர்வு தரும் பக்கங்கள். நடிகை ‘ஸ்ரீதேவி’க்கு அஞ்சலி. கண்களில் நீரை நிரப்பியது. வானவில் சந்தை பல அறிய புதிய செய்திகளை அள்ளித் தந்துள்ளது. ஸ்யாமின் ஓவியத்தில்...! ‘வசுமதி ராமசாமி’ மனக் கண்முன் நிற்கிறார்! - சுகந்தி நாராயண், வியாசர்நகர்.
ஸ்ரீதேவியின் நினைவுச்சுவடுகள் கண்களை குளமாக்கியது. முட்டை குறித்த ‘வானவில் சந்தை’ பயனுள்ளதாக இருந்தது. - கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.
இயற்கையோடு இணைந்த மலை வாழ்க்கை வாழும் நீலகிரி தோடர்கள் பற்றிய வாழ்வியல் கட்டுரை வித்தியாசமான குறும்படம் பார்த்த மலைப்பை ஏற்படுத்தியது! - அயன்புரம் த.சத்தியநாராயணன்.
சகலகலா வல்லி நடிகை டி.பி.முத்துலட்சுமி அவர்களின் கலைப்பயணம் தொடங்கி, அவர் நடித்த படங்கள் வரை அப்படியே ‘நகைச்சுவை’ அரசியை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திய தோழிக்கு ஒரு சல்யூட்! - T.முத்துவேல், திருப்பூர்.
கோத்தர்கள் பற்றி பாடத்திட்டத்தில் கேள்விப்பட்டதோடு சரி... விரிவாக விளக்கி ஆச்சர்யமான செய்திகளை தந்துவிட்டாள் ேதாழி. - ராஜி குருசுவாமி, ஆதம்பாக்கம், சென்னை-88.
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகை டி.பி.முத்துலட்சுமியின் நினைவுகளை தந்ததற்கு நன்றி. - தி.பார்வதி, திருச்சி-7.
பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றக்கூடிய ஐந்து வகையான வழிமுறைகளும் எளிமையாக இருந்தன. - கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
அட்டையில்: பிரியா வாரியர் படம்: கெளதம்
|