குழந்தைகளும் ஸ்மார்ட் கடிகாரங்களும்...



வாசகர் பகுதி

மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஸ்மார்ட் கடிகாரங்களை வாங்கித் தருகின்றனர். இதன் மூலம் குழந்தையின் இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் இதில் ஆபத்து உள்ளதாக கன்சியூமர் கவுன்சில்கள் எச்சரித்துள்ளன. வேண்டாதவர்கள், குழந்தைகளின் இருப்பிடம் மற்றும் நடமாட்டத்தை அறிந்து, அவர்களை கண்காணித்து துன்புறுத்தும் வாய்ப்பு அதிகம்!

மேலும் இத்தகைய ஸ்மார்ட் கடிகாரங்களை விற்கும் நிறுவனங்களுக்கும் இது சார்ந்த தகவல்கள் செல்கின்றன. அவர்கள் இவற்றை வைத்து என்ன செய்கிறார்கள் என்பது புரியவில்லை. ஆகவே குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கடிகாரம் வாங்கித் தரும் பெற்றோர் இவற்றை மனதில் கொண்டு வாங்கிக் கொடுப்பது நல்லது என கன்சியூமர் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்.