காதல் பழமொழிகள்
* காதலை தடுத்தல் அதை தூண்டுவது போன்றது - பிரான்ஸ் * காதல் போர் போன்றது, ஆரம்பிப்பது சுலபம், நிறுத்துவது கடினம் - மென்கென் * ஒரு நாயைக் கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது காதல் - ஜான் பிளாஸ்டர் * அன்பும், காதலும் தினம் வாழ்நாளில் வளர வேண்டும் என்பது ஆண்டவன் விருப்பம் - ஷேக்ஸ்பியர்
* கொலு மண்டபங்கள் போலவே குடிசையிலும் குடியிருப்பது காதல் - ஜான் ரே * எல்லா இடங்களிலும் காதலின் தூதுவன் பார்வைதான் - பல்கேரியா * காதலுக்கு காலம் கிடையாது - ஜெர்மனி * காதல் ஒரு வளையம். வளையத்திற்கு முடிவே கிடையாது - ரஷ்யா * காதல் உண்டாக்கும் புண்ணை அதுவே ஆற்றி விடும் - கிரீஸ் * காதல், மடமை இரண்டிற்கும் பெயரில்தான் வேற்றுமை - ஹங்கேரி * காதலின் இன்ப வேதனையை அறியாத நெஞ்சம் நெஞ்சமல்ல - பாரசீகம் * காதலின் குரலுக்கு எல்லா உணர்ச்சிகளும் தலை வணங்குகின்றன - லாங்பெல்லோ * காதல் கண்களால் பார்ப்பதில்லை, மனதால் பார்க்கிறது - ஷேக்ஸ்பியர் * காதல் காற்று வீசும் போது அறிவு, அனுபவம், தர்க்கம் ஆகியவற்றிற்கு இடமில்லை - புருனோ
- சா.அனந்தகுமார்
|