ப்ரியங்களுடன்



குறைந்த செலவில் அதிக பக்கங்களுடன் குங்குமம் தோழி சூடு, சுவை, சுவாரஸ்யம் நிறைந்த பல்வேறு நிறைய செய்திகளை ‘அக் ஷய’ பாத்திரமாக அள்ளி அள்ளித் தருகிறது. டிப்ஸ், ‘விழி’ப்புணர்வு  விஷயங்கள் ரொம்ப அருமை. புதுப் புத்துணர்ச்சியுடன் தொடர்ந்து வாசிக்கவும்  வைக்கிறது. ‘இரட்டிப்பு பிரமிப்பு’ தருகிறது. ‘சபாஷ்’ போட வைக்கிறது.  பாதுகாக்க வேண்டிய ‘பொக்கிஷ அமுதம்’. எல்லையில்லாத மனத் திருப்தியை மனநிறைவை  அள்ளி அள்ளித் தருகிறது.
- டி.என்.ரங்கநாதன், திருச்சி.

‘இன்னாமா கானா பாடுது இசைவாணி பொண்ணு ஆம்பளைங்களுக்கு சமமா பாடி கலக்குது இந்த குயீனு’ என்று பாடத் தோன்றியது கானா ராணி இசைவாணி பற்றிய கட்டுரையைப் படித்ததும்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.

இலக்கியத்தில் நெல் வகைகள் இத்தனையா? அதன் பெயர்களும்  இலக்கியத்தில் இருந்திருப்பது கண்டு வியந்தே போனேன்.
- மு.தாமரைச்செல்வி, மதுரை-7.

பாரம்பரிய கலைகள் அழிந்து விடாமல் இருக்க கலைத்தாய் அறக்கட்டளை போன்ற கலைக்குழுக்கள் மேற்கொண்டு வரும் இத்தகைய செயல்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியவை. நம் குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக், வெஸ்டர்ன் டான்ஸ் கற்றுக் கொடுப்பதைப் போல் சிலம்பம் மற்றும் ஆட்டக்கலைகளையும் கற்றுக் கொடுக்கலாம்.
- வினோதினி, நாச்சியார்கோவில்.

யூ ட்யூப் சமூக வலைத்தளம் இன்றைக்கு மிக முக்கிய பொழுதுபோக்காக மாறி விட்டது. டிவி சீரியல்களில் பார்த்த முகங்களை விட புதிய புதிய முகங்களையும், திறமையாளர்களையும் பார்க்க முடிகிறது. அவர்களில் சிலரைப் பற்றி யூ ட்யூபில் கலக்கும் பெண்கள் கட்டுரையை வெளியிட்டது நல்ல அறிமுகமாக இருந்தது.
- டி.சீதா, தாராபுரம்.

நடிகர் ரமேஷ் கண்ணா தன் மனைவியைப் பற்றிக் கூறியிருந்தது நெகிழ வைத்தது.
- வி.லதா, பாபநாசம்.

‘சும்மா அதிருதில்ல’ கட்டுரை கேரள இசைக்கருவியான செண்டை மேளத்தைப் பற்றிய நல்ல அறிமுகமாக இருந்தது. இல்லத்தரசிகள் தொடங்கி ஐடி ஊழியர்கள் வரை பல தரப்பினரும் இதனை கற்கிறார்கள் என்கிற தகவல் வியப்பளித்தது.
- கே.லாவண்யா, கோபிச்செட்டிப்பாளையம்.

‘செல்லுலாய்ட் பெண்கள்’ தொடரில் நடிகை தேவிகாவை பா.ஜீவசுந்தரி அறிமுகப்படுத்திய விதம் அருமையாக இருந்தது. வழக்கம் போலவே சுவாரஸ்யத்தோடு அதனை படித்தேன்.
- எம்.புவனா, திருச்சி.