ப்ரியங்களுடன்...



‘அருவி’ படத்தைப் பெண்ணியக் கண்ணோட்டத்துடன் மட்டும் பார்க்காமல் நடுநிலையாக விமர்சனம் எழுதி இருந்தது அருமை
- கண்ணகி, வேலூர்.

புடவை பற்றிய தகவல்கள் நிஜமாகவே சுவாரஸ்யம்தான்.
- மணிநாத், விழுப்புரம்.
 
வி.என்.ஜானகி பற்றிய செல்லுலாய்ட் பெண்கள் கட்டுரை நிறைவாக இருந்தது. ஒவ்வொரு இதழிலும் பா.ஜீவசுந்தரியின் கட்டுரை மெருகேறியவாறே இருக்கிறது. வாழ்த்துகள்.
- கலையரசி, உத்தமபாளையம்.
 
ராக்கி கபூரின் பயண அனுபவம்-வலியில் இருந்து அவர் பெற்ற படிப்பினை சிலிர்ப்பாக இருந்தது. அந்தப் பயணத்தில் நாங்களும் இணைந்து சென்றது போலவே இருந்தது.
- மலர்விழி, நீலகிரி.
 
வீட்டிலே வைக்கலாம் ப்யூட்டி ஷாப் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. குங்குமம் தோழிக்கு நன்றி.
- மாலினி மதி, திருச்சி.

கடந்த ஆண்டுகளில் நடந்த போராட்டங்கள் அனைத்ததையும் கண்முன்னே நிறுத்தியது. ‘இது போராட்டங்களின் ஆண்டு’ கட்டுரை. அருமையான தொகுப்பு.
- மாறவல்லி, கீழ்ப்பெரும்பள்ளம்.

ப்யூட்டி பாக்ஸ் வாசித்து அசந்து போனேன். இயற்கையான முறையில் கூந்தலை பாதுகாக்க பல்வேறு டிப்ஸ்களை வழங்கிய தோழிக்கு நன்றி
- அமலா, தஞ்சாவூர்.

‘அருவி’ நாயகியின் நேர்காணல் அருமையாக இருந்தது. தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் நடிக்க வாழ்த்துகள். இயல்பான நடிப்பால் மனதைத் தொட்ட அவர் சிகரம் தொடட்டும்
- ராஜேஸ்வரி, சென்னை.

இலவச இணைப்பான ப்ரக்னன்ஸி ரெசிபீஸ் புத்தகத்தில் இருந்த உணவு வகைகள் அனைத்தும் அருமை.
- வாணி, கடலூர்.