தமிழ் இலக்கியத்தில் நெல் வகைகள்



வாசகர் பகுதி

* ஆற்றுப் பாசனத்தில் விளையும் நெல்லை ‘சாளி’ என்று அழைத்தனர்.
* ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளைந்ததாகப் பதிற்றுப்பத்து கூறுகிறது.
* இந்த நெல்லின் பெயரில் ‘சாளியூர்’ என்னும் ஊர் இருந்ததை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
* மருத நிலத்தில் விளைந்த நெல் ‘முடந்தை’. இதன் தாள், மூங்கில் போல நீண்டும், பருத்தும் இருக்கும் என்கிறது பதிற்றுப்பத்து.
* குளத்துப் பாசனத்தில் விளைகிற ‘வெண்ணெல்’ பற்றி அகம், புறம், குறுந்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.

* மேட்டு நிலத்தில் விளைகிற நெல் ‘தோகை நெல்’ என்றழைக்கப்படுகிறது.
* குறிஞ்சி நிலத்தில் விளைகிற நெல் வகைகளில் ஒன்று ‘குளநெல்’.
* குறிஞ்சி நிலத்தில் விளையும் நெல் ‘ஐவன நெல்’, ‘மலை நெல்’ என்றழைக்கப்பட்டது.
* ‘சித்திரை வண்ணன்’, ‘சித்திரைக் காலம்’, ‘கார்த்திகை சம்பா’ என்று மாதங்களின் பெயரையும் ‘ராமபாணம்’, ‘சீதா போகம்’, ‘அர்ஜுனன்’ என்று இதிகாச காப்பிய மாந்தர்களின் பெயர்களாலும், நெற்பயிர்களுக்குப் பெயரிடப்பட்டன.
* கடவுள் பெயர்களான ‘தில்லைக்கூத்தன்’, ‘வீதி விடங்கர்’ போன்ற பெயர்களையும் வைத்து மகிழ்ந்தனர்.
* ‘பாண்டி சம்பா’, ‘கொங்காரு’, ‘திருநெல்வேலி நாதன்’, ‘கருங்குருவை’, ‘கருஞ்சூரை’, ‘கருப்பன்’, ‘செஞ்சம்பா’, ‘செந்தாழை’, ‘செம்மிளக்கி’, ‘நெடுமூக்கன்’, ‘மூக்கன் சம்பா’, ‘வாலான்’, ‘கட்டைவாலான்’, ‘காடைக்  கழுத்தன்’, ‘ஆனைக் கொம்பு சம்பா’, ‘கோதுமைச் சம்பா’ போன்ற பெயர்களும் நெல்லுக்கு அந்தக் காலத்தில் பெயர்கள் சூட்டப்பட்டன.
* கற்பூர மாலை, புனுகு சம்பா, மாணிக்க சம்பா, மாணிக்க மாலை, முத்துச் சம்பா, முத்து வெள்ளை, பொற்சாளி, பொற்பாலை, பொன் நாயகன் என்ற பெயர்களும் உண்டு.

- சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)