ஊசிமுனை ஓவியங்கள்எம்போஸ்டு வேலைப்பாடு

ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியினை கூடுதலாக எம்போஸ் செய்து வடிவமைத்துக்காட்டுவதற்குத் தேவையான விஷயங்களை, தோழி வாசகர்களுக்காக மிகவும் அழகாக வடிவமைத்து, எம்போஸ் செய்வதற்கான விஷயங்களை நேர்த்தியுடன் கற்றுத் தருகிறார், மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் நிறுவனத்தின் பயிற்றுனர் காயத்ரி.

தேவையான பொருட்கள்
ஜாக்கெட் துணி, அதற்கு ஏற்ற கலரில் திலக் ஸ்டோன், ஃப்ளவர் ஸ்டோன், வொய்ட் ஸ்டோன், கோல்டன் ஜமுக்கி, கோல்டன் பீட்ஸ், கோல்டன் ஷரி நூல், ப்ளவுஸ் கலர் ஷரி நூல், எம்போஸ்ட் திரட் அல்லது பயன்படுத்தாமல் உள்ள மொபைல் ஜார்ஜர் வயர், இத்துடன் ஆரி ஸ்டாண்ட், ஆரி நீடில், ஃபேப்ரிக் கம், கத்தரிக்கோல்.