கயல்விழி



- பி.கமலா தவநிதி
 
“நான் ஒரு நடிகையா இருந்தா எப்படி இருக்கும்னு கற்பனைகூட செஞ்சு பார்த்ததில்லை. ஆனா எதிர்பாராத விதமாதான் சினிமா துறைல நுழைஞ்சேன். ஆனா இப்ப சினிமாதான் உயிர்” என்று லேசாக சினேகா சாயலில் இருக்கும் ‘கயல்’ ஆனந்தி தன் மெல்லிய குரலில் பேசுகிறார். ‘‘நான் பத்தாவது படிச்சு முடிக்கும்போதே சினிமால வாய்ப்பு கிடைச்சுது. கிடைச்சத மிஸ் பண்ண வேண்டாம்னு தான் நடிக்க வந்தேன்.

ஒரு நடிகையோட ஆரம்ப காலத்துலயே ‘கயல்’ மாதிரியான பெரிய படம் கிடைக்கறது வரம்தான். இதுவரை தமிழ்லயே பல படங்கள் பண்ணியாச்சு. ஒவ்வொரு படம் முடிச்சுட்டு படிக்க போய்டணும், காலேஜ் போய்டணும்னுதான் நினைப்பேன். ஆனா அடுத்தடுத்து ஷூட் வந்துரும். பத்தாவதுக்கு அப்புறம் எக்ஸாமுக்கு மட்டும்தான் ஸ்கூல், காலேஜ் போவேன். காலேஜ் டேஸ்ஸை ரொம்ப மிஸ் பண்றேன்.

பொதுவாவே நான் நல்லா படிக்கிற பொண்ணு. சைன்ஸ், மேத்ஸ் சப்ஜெக்ட்ல தான் அதிகமா ஸ்கோர் பண்ணுவேன். ஆனா தெலுங்கு, ஹிந்தி பிடிக்காது. இந்த ரெண்டு பாடத்தையும் நான் ரொம்ப வெறுத்தேன். அதேபோல ஸ்கூல் காம்பெடிஷன்ஸ் எல்லாத்துலயும் ப்ரைஸ் வாங்குவேன். சின்ன வயசுல இருந்தே டான்ஸ்னா புடிக்கும்.

எல்கேஜி, யுகேஜிலயே டான்ஸ்க்காக நிறைய ப்ரைஸ் வாங்கியிருக்கேன். இப்பவும் அத பார்க்கும் போது சந்தோஷமா இருக்கும். நான் கிளாசிகல் டான்ஸர். செவென்த் படிக்கும்போது நிறைய ரியாலிட்டி ஷோ பண்ணிருக்கேன். இப்போ கதக் கத்துக்க ஆர்வம் இருக்கு. கதக்ல பயங்கரமான பெர்ஃபார்மன்ஸ் பார்க்கும்போது நானே ஆடற மாதிரி இருக்கும். எஸ்சைட்மென்டோட உச்சத்துல இருப்பேன்.

சாப்பாட்டு விஷயத்துல இதுதான் வேணும், அதுதான் வேணும்னு செலக்ட் பண்ணி சாப்பிட மாட்டேன். எல்லாமே சாப்பிடுவேன். எந்த டயட் சார்ட்டும் ஃபாலோ பண்றதில்ல. ஷூட் இல்லாதப்போ வீட்டில இருக்கும்போது அப்பா பானிபூரி, பாவ் பாஜி, குல்ஃபினு வாங்கித் தருவாங்க. சாட் ஐட்டம்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். மத்தபடி வீட்ல என்ன செய்யறாங்களோ அத சாப்பிட்டுக்குவேன்.

நல்லாவும் சாப்பிடுவேன். பொதுவாவே நடிகைகள் எல்லாரும் ஆறு வேளைக்கு பிரிச்சு சாப்பிடுவாங்க. ஃபிட்னெஸ்ல ரொம்ப கவனமா இருப்பாங்க. ஆனா நான் ஃபிட்னெஸுக்காக பெரிசா மெனக்கெடுறதில்ல. ஷூட்டிங் இல்லாதப்போ 9 மணி வரைக்கும் தூங்குவேன். மெடிடேஷன் மட்டும் செய்வேன். ஜிம் பக்கம் போனதே இல்ல. இப்போ எல்லாரும் என் உடம்பை தேத்த சொல்றாங்க.

அதுக்கு இனிமேதான் பிளான் போடணும். ஷூட்டிங்குக்காக வெளியூர் நிறைய போனதுண்டு. என்னோட ட்ராவல் எல்லாமே இப்படி வேலை விஷயமா நடந்ததுதான். இந்தியாவைத் தாண்டி எங்கேயும் போனதில்லை. இப்பதான் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கோவா போலாம்னு பிளான் பண்ணிருக்கோம். எனக்கு டைம் கிடைக்கிறதே இல்ல. வெளிய போறப்ப ரொம்ப மேக்கப் போடுறதோ, ரொம்ப ஹெவி டிரஸ் போடவோ பிடிக்காது. மினி ஸ்கர்ட் போட சுத்தமா பிடிக்காது.

சல்வார் இருந்தால் போதும். எனக்கு ரொம்ப சிம்பிளா இருக்கத்தான் பிடிக்கும். ரொம்ப ஆர்வமா ஜுவல்லரி வாங்குவேன். ஆனா போட மாட்டேன். ஷூட் இல்லாதப்ப தோடுகூட போட மாட்டேன். அம்மாவா எடுத்து குடுத்தா மட்டும்தான் போட்டுக்குவேன். நான் அவ்வளவு சோம்பேறி. அம்மாவும், தங்கச்சியும்தான் என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ். அவங்ககிட்ட தான் எல்லாமே ஷேர் பண்ணுவேன்.

அவங்க ரெண்டு பேரு மட்டும் இருந்தா போதும். நேரம் போறதே தெரியாது. இப்ப குட்டி குட்டி ஸ்டோரீஸ் எழுத ஆரம்பிச்சுருக்கேன். இப்போதைக்கு அதுதான் என்னோட ஹாபி. பெட் அனிமல் வளர்க்க ஆசை இருக்கு. ஆனா எனக்கு பயமும் சேர்ந்து இருக்கு. ஷூட்டிங்ல நாய் இல்ல பூனை இருக்கும் சீன் இருந்தாலே அவ்ளோ பயப்படுவேன். அப்பப்போ புக்ஸ் படிக்கிற பழக்கமும் இருக்கு. என்னோட ஸ்கின், ஹேர் இயற்கையாவே நல்லா இருக்கு.

அதுக்காக ஸ்பெஷலா ஏதும் பண்ணுறதில்ல. வீட்லையே அம்மா எனக்காக சின்ன பியூட்டி பார்லர் வச்சுருக்காங்க. ஷூட்டுக்கு முன்னாடி கொஞ்சம் கேர் எடுக்கறதோட சரி. இவ்ளோதாங்க கயல். ரெண்டு படம் ரிலீஸ் ஆகப்போகுது. அதுல என்னோட ரோல்ல ரொம்ப நல்லா பண்ணிருக்கேன்னு நம்புறேன். ரொம்ப திருப்தியா இருக்கு. எந்த ஹீரோ கூட நடிக்கணும்னு ஆசைப் படுறீங்கனு மட்டும் கேட்காதீங்க. பார்த்து தெரிஞ்சுக்கோங்க” என சஸ்பென்ஸ் வைக்கிறார் கயல் ஆனந்தி.