நலம் தரும் மருத்துவம்அறிவோமா?

வாசகர் பகுதி


அத்தி

* அத்தி இலையை அடிக்கடி உண்டு வந்தால் உதட்டுப்புண் ஆறும்.
* புரையோடிய புண், காயம் ஆற அத்திப்பால் தடவலாம்.
* அத்திப் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் அடையும்.
* சாப்பாட்டுக்குப் பின் அத்தி விதைகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
* அத்திப் பழம் தினமும் ஐந்து முறை சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

கீரையின் மருத்துவ குணங்கள்

* புதினா கீரை - நரம்பு வலுப்பெறும்.
* புளிச்சக் கீரை - மந்த நிலை நீங்கும்.
* சிறுகீரை - சிறுநீரகம் வலுவடையும்.
* தண்டுக்கீரை - பித்தம் தணியும்.
* பசலைக் கீரை - மூளை பலப்படும்.
* மணத்தக்காளி - இதயம் வலிமையாகும்.
* அகத்திக்கீரை - வயிற்றுப் புண் நீங்கும்.
* முருங்கைக் கீரை - நீரிழிவு நோய் குறையும்.
* அரைக் கீரை - நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
* முளைக்கீரை - ரத்தம் சுத்தமடையும்.
* சிவப்பு தண்டுக்கீரை - உடல் குளுமை பெறும்.
- எம்.செல்லையா, சாத்தூர்.

பாகற்காய்

* உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும்.
* பசியைத் தூண்டும்.
* பித்தத்தைத் தணிக்கும்.
* தாய்ப்பால் சுரக்க இது உதவுகிறது.
* காய்ச்சல், இருமல், இரைப்பு, மூலம் போன்றவை சரியாகும்.
* ரத்தம் சுத்தப்படும்.
* சருமம் பளபளப்பாகும்.
* முற்றிய பாகற்காய் சர்க்கரை வியாதியைப் போக்குகிறது.
* உடலில் கட்டி, புண்கள் இருந்தால் அவற்றைப் போக்குகிறது.
* உடல் ஊட்டத்திற்கு இது சிறந்த டானிக்காகப் பயன்படுகிறது.
* உள்ளங்கால் எரிச்சலை கட்டுப்படுத்துகிறது.
* இது வயிற்றுப்போக்கை சரிப்படுத்துகிறது.

மணத்தக்காளி

* ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
* இருமல், காய்ச்சல் குறையும்.
* சர்க்கரைநோய், சிறுநீர் பிரச்னை சீராகும்.
* வாத நோய், வாயுக்கோளாறு அகலும்.
* தேன் கலந்து சாப்பிட்டால் உடல் பருக்கும்.
* இதயம் வலுப்பெறும்.
* ஈரல் நோய்களுக்கு நல்லது.
* உடல் தேறும்.
* சூடு தணியும்.
* நல்ல உறக்கம் தரும்.
* வயிற்றுப்பூச்சி வெளியேறும்.
* வாய்ப்புண், தொண்டைப்புண் ஆறும்.
* கை, கால் வலி குறையும்.
* கோழையை அகற்றும்.
* மலச்சிக்கல் சீராகும்.
* கண் பார்வை தெளிவடையும்.
* சருமப் பிரச்னைக் குறையும்.
* வயிற்றுவலி சீராகும்.
* ரத்த அழுத்தத்தைத் தணிக்கும்.

மிளகு

* மிளகு நஞ்சை முறிக்கும் பேராற்றலுடையது.
* நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
* புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்கிறது.
* உணவு செரியாமை, மலச்சிக்கல் போன்றவற்றை வராமல் செய்கிறது.
* உடலில் கொழுப்பு செல்கள் குறைய உதவுகிறது.
* நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
* மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது.
* பல் சொத்தை, ஈறு வீக்கம், பல் வலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.

கற்றாழை

* நீர்க் கடுப்பு, நீர்த் தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, இதனுடன் சமமான அளவில் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை உண்டு வந்தால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
* கண் எரிச்சலும், சிவந்த  நிறமும் மறைந்து விடும்.
* நல்ல உறக்கம் வரும்.
* கண் பார்வை தெளிவு பெறும்.
* ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.
* இதன் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து சாப்பிட குருதியும், சீதலமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

- ச.இலக்குமணசுவாமி, மதுரை.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)