ப்ரியங்களுடன்...



‘மண்ணை மீட்கப் போராடும் பெண்கள்’  கண்டதும் பெருமைக் கொண்டேன்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

எம்.சரோஜா பற்றிய கட்டுரை கனகச்சிதம். கட்டுரை தித்திப்பு!
- சு.கெளரிபாய், பொன்னேரி.

நாட்டார் வழக்காற்றியலை கி.ராஜநாராயணனின் வாரிசாக முன் நின்று களப்பணி ஆற்றி மறைந்த கழனியூரனின் இழப்பு வெற்றிடம் என்பது பேருண்மை.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

காமமே காதலின் அடிப்படை என்று பார்க்கப்படும் காதலின் அகத்தையும் புறத்தையும் குறித்து மனங்களில் பதிவு செய்தமை சிறப்பு.
- வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவிந்திரன், நாகர்கோவில்.

கோமாளி வேடமிட்டு குழந்தைகள் மட்டும் அல்ல, அனைவரையும் மகிழ்விக்க வைப்பவர் வேலு சரவணன்.
- ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘க்ரீன் காபி’யில் சாதிக்கும் மணிமேகலை அசத்தல். ‘ஐடி டூ பிசினஸ்..’ பாரம்பரிய செம்பு பாத்திர தயாரிப்பில், சாதித்துக் காட்டிய ராஜ பாராட்டுக்குரியவர்.
- மயிலை கோபி, அசோக் நகர்.

 கதாநாயகிகளைப் பற்றி எழுதி வருவதுடன் காமெடி நடிகைக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து எம்.சரோஜாவைப் பற்றி பா.ஜீவசுந்தரி எழுதிய கட்டுரை பிரமாதம்!்.
- ஆர்.ரங்கராஜன், மதுரை.

ரோபோ ரோபோ என்ற கட்டுரையை படித்ததும் பெரிதும் வியந்து போனேன். சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம்.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி.

நாடகக் கலைஞர் வேலு சரவணனின் நேர்காணல், குழந்தை வளர்ப்பு குறித்து நல்லதொரு வகுப்பையே நடத்தியிருந்தது.
- வி.கலைச்செல்வி, தோட்டக்குறிச்சி.

ஆண்களின் சிகையலங்காரத்தை வாழ்க்கை ஆதாரமாக்கிய பெட்ரீஷியா மேரியின் துணிச்சல் போற்றுதலுக்குரியது.
- எஸ்.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.

மண்ணை மீட்கப் போராடும் பெண்கள், சுற்றுச்சூழல் போராளி, செல்லுலாய்ட் பெண்கள் கட்டுரைகள் பெண்ணின் பெருமையை சுட்டிக் காட்டுகிறது.
- இல.வள்ளிமயில், திருநகர்.

காதலுக்கு இதயம் மட்டுமே உண்டு என்றால் அதை விடவும் முக்கியம் அகமும் புறமும் என்பதை கட்டுரை புரிய வைத்துவிட்டது.
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.