தோழி சாய்ஸ்
-ஷாலினி நியூட்டன்
எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த அரச கால ஸ்டைல்களுக்கு மட்டும் எப்போதும் ஒரு மாஸ் இருக்கும். அனார்கலி சல்வார், டயானா ஹேர் கட், கிளியோபாட்ரா ஹேர் ஆக்ஸாரிஸ் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சமீபத்திய வரவு இந்த மஸ்தாணி உடைகள். எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் பளிச்சென நம்மை அழைத்து தொட்டுப்பார்க்க வைத்துவிடும்.
 ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மட்டும் விட்டுவிடுமா? இந்த உடையே அதீத கிராண்ட் லுக் என்பதால் தோடு மற்றும் தலையலங்காரம் மட்டும் சிறப்பாக தேர்வு செய்தால் ’மஸ்தானா மஸ்தானா’ என ஹம் பண்ண வைத்து விடும்.
பிங்க் நிற செமி ஸ்டிட்ச் மஸ்தாணி உடை விலை: ரூ.849 புராடெக்ட் கோட்: 95386716 shopclues.com
சிலர் மஸ்தாணிகளுடன் ஸ்டில்ட்டோஸ் அல்லது பம்ப்ஸ் பயன்படுத்துவதைக் காணலாம். அவைகள் சிறந்த லுக் கொடுத்தாலும் சரியான தேர்வு ஜூடி அல்லது மொஜாரி எனப்படும் எம்பிராய்டரி காலணிகள்தான். கொஞ்சம் தங்க நிறம் கலந்தத் தேர்வாக இருந்தால் பளிச்சென இருக்கும்.
 பிங்க்&தங்க நிற மொஜாரி ஷூ விலை: ரூ.975 புராடெக்ட் கோட்: Step n Style Women Velvet & Leather Khussa Shoes amazon.in
பிங்க் நிற கல்தோடு விலை: ரூ. 799 புராடெக்ட் கோட்: Rukhsaar Pink Earrings Jabong.com
பொட்லி ஹேண்ட் பேக் விலை: ரூ.750 புராடெக்ட் கோட்: 1234274 mirraw.com
 பிங்க் கல் பிரேஸ்லெட் மஸ்தாணி சுடிதார்களே அதீத வேலைப்பாடுகள் கொண்ட கை வடிவமைப்புகள் இருக்கும் என்பதால் வளையல்களுக்கு பதில் பிரேஸ்லெட் பயன்படுத்தலாம். விலை: ரூ.1899 புராடெக்ட் கோட்: KCCN238 Amazon.in
ஷோல்டர் டவுண் டாப் தெரிந்தும் தெரியாமல் கொஞ்சம் கிளாமர், மாடர்ன் லுக் என்று இந்த ஷோல்டர் டவுண் டாப்களுக்கு உண்டு. 80கள் துவங்கி இப்போதுவரை எவர்க்ரீன் ஃபேஷன் லிஸ்டில் இருக்கின்றன. ¾ ஜீன்ஸ், பென்சில் ஷார்ட் ஸ்கர்ட், லாங் ஏ லைன் ஸ்கர்ட் என எதனுடனும் மேட்ச் செய்து அசத்தலாம். நண்பர்கள் சந்திப்பு, அவுட்டிங் என கேஷுவல் கிளாமர் லுக் எளிதாக கொடுத்துவிடும் இந்த பாணி உடை.
சாம்பல் நீல நிற ஷோல்டர் டாப் விலை: ரூ.1299 புராடெக்ட் கொட்: 13480435 Limeroad.com
ஃபிரிஞ்சஸ் இணைக்கப்பட்ட கருப்பு நிற ஹேண்ட்பேக் விலை: ரூ.1699 புராடெக்ட் கோட்: IN1533AVVBAGBLA-112 stalkbuylove.com
ஹூப் எனப்படும் காது வளையம் (சில்வர் டோன்) விலை: ரூ.545 புராடெக்ட் கோட்: 1626184 myntra.com
சிம்பிள் ஏ லைன் வெள்ளை ஸ்கர்ட் விலை: ரூ.999 புராடெக்ட் கோட்: IN1708MTOSKTWHT-217 stalkbuylove.com
ஸ்கர்ட், ஜீன் என எதற்கும் பொருந்தும் வெட்ஜஸ் எனப்படும் பிளாட்ஃபார்ம் ஹீல் செருப்புகள் பயன்படுத்தலாம். பாட்டம் உடைகள் என்ன வண்ணமானாலும் சரி கருப்பு நிற காலணி பொருந்தும்.
கருப்பு நிற வெட்ஜஸ் விலை: ரூ.499 புராடெக்ட் கோட்: SDL869381086 snapdeal.com
|