ஊசிமுனை ஓவியங்கள்



-செல்வி மோகன்

மெல்லிய கோல்டு ஜர்தோஷி ஒர்க்

திருமணப் பெண்களுக்காக தைக்கப்படும் ஜாக்கெட்டுகள் கொஞ்சம் கிராண்டாக இருக்கும்போது விலை உயர்ந்த கல்யாணப் புடவைகளுக்கு தகுந்தபடி அமைவதோடு அழகாக அலங்காரம் செய்யப்பட்ட மணப்பெண்ணுக்குக் கூடுதல் அழகையும் கொடுக்கும். ஜாக்கெட்டுகளில் கிராண்ட் ஒர்க் செய்யப் பயன்படும் முறைகளில் ஒன்று மெல்லிய கோல்டு ஜர்தோஷி ஒர்க்.

நமது கற்பனைக்குத் தகுந்தபடி மெல்லிய கோல்டு ஜர்தோஷியை பயன்படுத்தி நமது ஜாக்கெட்டுகளில் சிறந்த முறையில் டிசைன் செய்வது குறித்து செய்து காட்டுகிறார், மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குனர் செல்வி மோகன் தலைமையில் பயிற்சியாளர் அனுராதா.

தேவையான பொருட்கள்
ஜாக்கெட் துணி, மெல்லிய கோல்டு ஜர்தோஷி, ஜரி நூல், சிறிய ஊசி, மெஷின் நூல், ட்ரேஸ் பேப்பர், கார்பன் ஷீட், கத்திரிக்கோல், பென்சில், வுட் ஃப்ரேம்.