ப்ரியங்களுடன்...



சாதனையாளர் பி.எஸ்.சரோஜாவுக்கு ஏற்பட்ட சோதனைகளை படித்தபோது என்னை அறியாமலே என்னுள் துக்கம் புகுந்து விட்டது. மனம் நெகிழ்ந்தேன்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

கடலில் கரைத்த பெருங்காயம் போல் கண்டும் காணாதது போல் செயல்படும் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பிலுள்ள நிர்பயா நிதி குறித்த அலசல் மகத்தானது.
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

புகைப்படத்தில் அச்சமூட்டும்வண்ணம் இருக்கும் விலங்குகளை நெருங்கி எப்படித்தான் கானுயிர் புகைப்படம் எடுத்தார்களோ அவர்களின் தைரியத்திற்கு ஒரு ‘ஹாட்ஸ் ஆஃப்’.
- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.

பி.எஸ்.சரோஜாவை பற்றிய, இதுவரை தெரியாத பல அரிய செய்திகளை தந்த பா.ஜீவசுந்தரிக்கும் தோழிக்கும் இதயங்கனிந்த பாராட்டுகள்.
- தி.பார்வதி, திருச்சி.

லென்ஸ் கட்டுரை மிகச்சிறப்பாக இருந்தது. இதே போல் எலுமிச்சை தோலின் பயன்கள், கட்டுரைகள் பல அறிய வேண்டிய தகவல்களோடு எழுதப்பட்டிருந்தது.
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்.

ஊஞ்சலாடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை ஊஞ்சலோடு ஊஞ்சலாடு என்ற கட்டுரை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்திருந்தது.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி.

மகளிருக்கானச் சட்டவிதிகளை தொகுத்து வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்று அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை புரிவதை பெற்றோர்் உணர வேண்டும். ‘விழியில் விரியும் காடு’ எனும் அழகிய தலைப்பில் கட்டுரையை வாசித்தபோது ஹாலிவுட் படம் பார்த்த த்ரில் இருந்தது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

பி.எஸ்.சரோஜா கட்டுரை படித்து வியப்பிலாழ்ந்தேன். இவரது திறமைக்கு கொஞ்சமாகத்தான் திரையுலகம் தீனி அளித்திருக்கிறது என்பது ஆதங்கத்தை ஏற்படுத்தியது.
- ஆர்.ரெங்கராஜன், மதுரை.

வெயிலில் கருத்து விட்டதா முகம், எலுமிச்சை தோலின் பயன்களும், ’பெற்றோர் கவனத்திற்கு’ நல்ல அறிவுரையும் பாராட்டத்தக்கது. கிச்சன் டிப்ஸ் மிக மிக அருமை.
- சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

ராஜேஸ்வரியின் பேட்டியில் உழைப்பும் வெற்றியும் பளிச்சென தெரிந்தது. முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு இவரே உதாரணம்.
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.

எவரெஸ்ட் சாதனையாளர் அன்சுஜாம் சென்யா பெண்களை பெருமைப்பட வைத்துவிட்டார்.
- வி.கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.