என்ன உடை? எங்கு வாங்கலாம்?



பட்... படார்... கொண்டாட்டம்!

ஷாப்பிங் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் தீபாவளி ஷாப்பிங் என்றால் கேட்கவே வேண்டாம். புதுசா என்ன டிரஸ் வாங்கலாம் என்பதைத் தாண்டி புதுசா புதுசா என்னென்ன டிசைன், என்னென்ன வெரைட்டி வந்திருக்கு? இப்போ என்ன டிரெண்ட்? என பார்த்து பார்த்து வாங்குவதே தனி உற்சாகம்தான். இந்த தீபாவளிக்கு புடவை தொடங்கி நவீன ஆடைகள் வரை புதுசா என்னென்ன வந்திருக்குன்னு உங்களுக்கு அறிமுகம் செய்றோம். புதுசு புதுசா வாங்குங்க... தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்க.

சென்னை சில்க்ஸ்

டிசைனர் புடவைகளில் விபன்ஜி லைட் சில்க், விவாகா ஸ்வரோவஸ்கி, பட்டுப் புடவைகளில், நவநாகரிக இக்கத் சாஃப்ட் சில்க், போச்சம்பள்ளி  போன்றவை  புது வரவாக உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டு நூலால் செய்யப்பட்டதால்  லேசாக இருப்பது இதன் சிறப்பம்சம். சாஹித்யம் ஸ்ெபன் சில்க் மென்மையாக ஜரிகை நெசவு செய்யப்பட்டுள்ளதால் கிராண்ட் லுக் கிடைக்கிறது. சென்த்தெரிக் கட் ஒர்க் மற்றும் ஃபேன்சி பேட்ச் வொர்க் பொருத்தப்பட்ட கதானா புடவைகள் இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அணியக்கூடிய டிசைன்களில் கிடைக்கின்றன.

சாகம்பரி சில்க்ஸ்

சர்வ லட்சணம் நிறைந்த டபுள் வார்ப்பு செய்யப்பட்ட ஐஸ்வர்யம் பட்டு, காஞ்சிபுர கலைவண்ணத்தைக் காட்டும் பண்டோரா பட்டு, மென்மையாகவும் 16 வயது முதல் அனைத்து பெண்களும் அணியக் கூடிய வகையில் இருக்கும் மேகதூது, முந்தானையிலும் கொசுவத்திலும் ஒரேமாதிரியான டிசைன் கொண்ட பாட்லி பட்டு இதெல்லாம் இந்த தீபாவளி ஸ்பெஷல். லெனின், மணிப்பூரி, நேகமன், கலம்கரி, பட்டோலா, சர்ட்வால் போன்ற வகை சல்வாரிலும் புது டிசைன்கள் கிடைக்கின்றன.

சுந்தரி சில்க்ஸ்

பட்டுப் புடவைகளில் தங்க சரிகை, வெள்ளி சரிகை நாம் அறிந்தது. இந்த தீபாவளிக்கு பெண்களை கவரும் வண்ணம் காப்பர் ஜரிகை  புடவைகள் அறிமுகம் ஆகியுள்ளன. பட்டோலா, பனாரஸ், ேகாட்டா, சந்தேரி காட்டன், பிரின்டட் சில்க், சுங்கிடி காட்டன்  ேபான்ற வகைகளில் வித விதமான வண்ணங்களில் வித்தியாசமான டிசைனர் புடவைகள் கிடைக்கின்றன. டாப்ஸ், சல்வார், அனார்கலி சல்வார், தாவணி, பிளாசோ பேன்ட்ஸ் என ஏற்கனவே நமக்கு அறிமுகமான வெரைட்டியிலும் புது டிசைன்கள் வந்துள்ளன.

பாக்டம் வியர்ஸ்

குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை அனைவரும் விரும்பும் லெக்கிங்ஸிலும் பல ரகங்கள் இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காட்டன் லெக்கிங்ஸ், ஆங்கிள் லென்த் ஸ்ட்ரெச் லெக்கிங்ஸ், பிரிமியர் விஸ்கோஸ் லெக்கிங்ஸ்கள் என லெக்கிங்ஸ்கள் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஸ்டைலான  அற்புதமான உணர்வை தருகின்றன. ஜீன்ஸ் கிளாத்தில் தைக்கப்பட்ட லெக்கிங்ஸ் வகையான ஜெக்கிங்ஸ், டெனிம் கிளாத் ஜெக்கிங்ஸ் ஆகியவையும் கூட பாக்கெட்டுகளுடன் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

த்ரீ ஃபோர்த் கப்ரி  ஜெக்கிங்ஸ் விளையாடும்பொழுது அணிவதற்கு ஏற்றது போல வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கண்களைக் கவரும் பலவண்ண நிறங்களிலும் கிடைக்கிறது. நவீன ஆடையான லெக்கிங்ஸுக்கு ஏற்ற புது வகையான டாப்ஸ்களும் பல விதமான மாடல்களில் கிடைக்கிறது.

ரதி சில்க்ஸ்

குழந்தைங்க இல்லாம கொண்டாட்டமா? இதோ குழந்தைகளுக்கான வாவ் கலெக்‌ஷன்ஸ். பெண் குழந்தைகளுக்கான மினி புடவை ரகங்கள் எல்லோருக்கும் அறிமுகமானதுதான். ஆனால், அதிலும் கொஞ்சம் வித்தியாசமா, புதுசா இந்த தீபாவளிக்கு, பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட நக்ஹத்ரா, சன்ஃபிளவர் வகை மினி புடவை ரகங்கள் அறிமுகமாகி உள்ளன. பல்வேறான வண்ணங்களில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு பேட்ச் ஒர்க், லேஸ் ஒர்க் என இந்த ரகம் கண்களை கவர்கிறது.

பெண் குழந்தைகளுக்கு அழகு சேர்க்கும் பாவாடை ரகங்கள் முன்பைவிட அழகாக விதவிதமாக வந்துள்ளன. கரிஸ்பா, சிலாப் மற்றும் வாரணாசி பார்டர், ஜோதிகா பாவாடை, தைனிகா பாவாடை, ஷிவானி, கீர்த்தி, சுசி பட்டர்ஃபிளை பாவாடைகள் என இந்த தீபாவளிக்கு கலெக்‌ஷன் ஏராளம்.

போத்தீஸ்

பெண்களின் இதயம் கவர்ந்த வசுந்தரா பட்டு இப்போது புது டிசைன்களில் வந்துள்ளது. டிசைனர் புடவை ரகங்களில் சைனா நெட் சாரி, த்ரீ டி சாரி, சனா சில்க், சாரியட் பிராஸோ இந்த தீபாவளிக்குப் புதுசு. இளம் பெண்களின் சூப்பர் ஸ்டார் குர்தீயில் இந்த ஆண்டு புதுசு சிந்து குர்தீ. மஸ்தானி மற்றும் மஸ்தகலி சுடிதாரிலும் தீபாவளி கலெக்‌ஷனாக புது டிசைன்கள் வந்துள்ளன.

ராம்ராஜ்

ஆண்களுக்கான கடையாக இருந்த ராம்ராஜ் இப்போது பெண்களுக்கென முதன்முறையாக துணிரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. கேரள பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ரசாயனக் கலவை இல்லாத, சாயமற்ற முறையில் தயாரிக்கப்படும் ரம்யம் எக்கோ சாரீஸ் இந்த தீபாவளி ஸ்பெஷல். இதே ரகத்தில் புதிதாக சுடிதார் மற்றும் பாவாடை ரகங்கள் வந்திருப்பது இளம்பெண்கள் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். நவீன ஆடைகளிலும் புது ரகங்கள் வந்துள்ளன.

தொகுப்பு: சதீஷ்