படிக்க பிறந்தவர்கள்
எப்ப எக்ஸாம் எழுதப் போனாலும் அப்பாவும் நானும் சேர்ந்துதான் போவோம். எக்ஸாம் ஹாலுக்கு வெளியில ரெண்டு பேரும் நின்னு பேசிட்டிருப்போம். டைம் ஆனதும் அப்பா ஹாலுக்குள்ள போவார். நான் அவருக்கு `ஆல் தி பெஸ்ட்’ சொல்லிட்டு வெளியில வெயிட் பண்ணுவேன். அப்பாகூட எக்ஸாம் எழுதற எல்லாரும் என் வயசுக்காரங்களா இருப்பாங்க. `உங்கப்பா எத்தனை வாட்டி ஃபெயில் ஆனார்’னு என்கிட்ட விசாரிப்பாங்க.

ஒருவாட்டிகூட ஃபெயில் ஆகலை. இதுதான் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்’டுனு சொல்றதைக் கேட்டு, எங்க ரெண்டு பேரையும் ஒரு மாதிரியா பார்ப்பாங்க. நாங்க அதைப் பத்தியெல்லாம் கவலையே பட்டதில்லை. ஒவ்வொரு வருஷமும் அப்பா எக்ஸாம் எழுத, நான் அவர்கூட போகிற இந்தக் கதை தொடர்ந்திட்டிருக்கு...’’ - சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறார் தனுஜா தர்மேந்திரகுமார்!
சமையல்கலை நிபுணராக தனுஜாவை அறிந்த பலருக்கும் அவரது இன்னொரு முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யெஸ்... தனுஜாவின் இன்னொரு அடையாளம் படிப்ஸ்!’அதுவல்ல விஷயம்... படிப்பு விஷயத்தில் 30 பிளஸ்சில் இருக்கிற தனுஜாவுக்கும், 70 பிளஸ்சில் இருக்கும் அவரது அப்பா ராமமூர்த்திக்கும் கடும் போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது! அப்பா ஒரு படிப்பை முடித்தால் போட்டி போட்டுக் கொண்டு மகள் ஒரு படிப்பை முடிப்பதும், மகள் முடிப்பதை அடுத்து அப்பா படிப்பதுமாக அது ஒரு ரிலே ரேஸ்!
நான் எட்டாவது வரைக்கும் சென்னையில படிச்சேன். அப்பாவோட வேலை காரணமா வருஷத்துக்கொரு ஊருக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும். ஒன்பதாவதும் பத்தாவதும் மத்தியப்பிரதேஷ்ல படிச்சேன். எனக்கு கணக்குப் பாடமே வராது. ஆனா, சூப்பரா இங்கிலீஷ்ல கவிதைகள் எழுதுவேன். கணக்கு வராட்டா என்ன... உனக்கிருக்கிற எழுத்துத் திறமைக்கு ஜர்னலிசம் படிக்கலாம்’னு அப்பா சொன்னது என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு.
நாக்பூர்ல பிளஸ் ஒன் படிச்சேன். அதை அங்கே ஜூனியர் காலேஜ்னு சொல்வாங்க. அங்கே கணக்கு வேண்டாம்னா வேற பாடம் மாத்தி எடுக்க 14 ஆப்ஷன் இருந்தது. பத்திரிகையாளராகிற கனவுல இருந்ததால பொலிட்டிகல் சயின்ஸ், எகனாமிக்ஸ், ஹோம் எகனாமிக்ஸ் எடுத்தேன். அடுத்து பி.ஏ. ஆர்ட்ஸ் படிச்சேன். ஸ்காலர்ஷிப் கிடைச்சதோட இல்லாம, ஒட்டுமொத்த மகாராஷ்டிராவுல 118வது ரேங்க் எடுத்தேன். அப்புறம் மறுபடி சென்னை வந்தோம். எம்.ஏ. ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் முடிச்சேன். உடனே நாக்பூர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ல வேலை கிடைச்சது. அப்புறம் அப்பாவுக்கு கொல்கத்தாவுக்கு டிரான்ஸ்ஃபர். அங்கே போய் பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் படிச்சேன். கூடவே ஒரு அட்வர்டைசிங் கம்பெனியிலயும் வேலை பார்த்தேன்.
மறுபடி சென்னை வந்தோம். சன் டி.வி.யில நியூஸ் புரொடக்ஷன்ல ெகாஞ்ச நாள் வேலை. இதுக்கிடையில எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல லெக்சரர் வேலை கிடைச்சு சேர்ந்தேன். இடைப்பட்ட நாட்கள்ல எம்.ஃபில்லும், யுஜிசி எக்ஸாமையும் கிளியர் பண்ணினேன்.இது எல்லாத்துக்கும் எனக்கு அப்பாதான் இன்ஸ்பிரேஷன். நான் பிறந்ததுலேருந்தே அப்பா படிக்கிறதைப் பார்த்திருக்கேன். வயசோ, அவர் பார்த்த வேலையோ, வேற எதுவுமோ அவரோட படிப்பார்வத்துக்குத் தடை போடலை. எக்ஸாம் ஹாலுக்குள்ள அவர் நுழையறபோது கூட எக்ஸாம் எழுதற ஸ்டூடன்ட்ஸ் அவர் காதுபட கிண்டலடிச்சிருக்காங்க. அவர் அதையெல்லாம் கண்டுக்காம, படிப்பார். அவர் வயசுக்கு அவரே இவ்வளவு ஆர்வமா இருக்கிறபோது என்னால முடியாதாங்கிற வேகம்தான் நான் படிக்க காரணம்....’’ தனுஜா நிறுத்த, தொடர்கிறார் அவரது அப்பா ராமமூர்த்தி. கோல் இந்தியா நிறுவனத்தில் அக்கவு்ன்ட்ஸ் ஆபீசராக சேர்ந்து, சீஃப் ஜெனரல் மேனேஜராக ஓய்வு பெற்றவர்.
62ல பி.காம் முடிச்சேன். 68ல ஐசிடபிள்யூஏ முடிச்சதும் கோல் இந்தியாவுல வேலை கிடைச்சது. கல்யாணத்துக்குப் பிறகு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆகும். சில ஊர்களுக்கு குடும்பத்தோட போவோம். சிலதுக்குப் போக முடியாது. மனைவியையும் பிள்ளைகளையும் சென்னையில விட்டுட்டு, நான் மட்டும் வேற ஊர்ல இருந்தப்ப, எனக்கு நிறைய டைம் கிடைச்சது. என்னை மாதிரி குடும்பத்தை விட்டுத் தனியா இருந்த பலரும் அரட்டை அடிக்கிறது, தண்ணி அடிக்கிறது, கிளப்புக்கு போறதுனு பொழுதைப் போக்குவாங்க. எனக்கு அதுல எல்லாம் விருப்பமில்லை.
ஒருமுறை ரயில் பயணத்துல அறிமுகமான இங்கிலீஷ் புெராஃபஸர் இங்கிலீஷ் லிட்ேரச்சர் பத்தின சுவையை எனக்குக் காட்டினார். அதனால எம்.ஏ. இங்கிலீஷ் லிட்ேரச்சர் படிக்க முடிவு பண்ணினேன். அதை முடிச்சதும் மனசு உற்சாகமாகிடுச்சு. அடுத்து எம்.ஏ. பப்ளிக் அட்மினிஸ்ட்ேரஷன் பண்ணினேன். அப்புறம் ரெண்டு எம்.பி.ஏ. முடிச்சேன். திடீர்னு சட்டம் படிக்கணும்னு ஒரு ஆசை. அதனால எல்.எல்.பி. படிச்சேன். 2003ல ரிட்டயர்டு ஆனதும் இன்னும் நிறைய நேரம் கிடைச்சது. எம்.எல். முடிச்சேன்.
சமையல் கலை, கைவினைக் கலைகள்ல தனுஜா அப்படியே அவங்கம்மா மாதிரின்னா, படிப்பு விஷயத்துல என்ைன மாதிரி. நான் ஒரு எக்ஸாம் எழுதிட்டு வந்தா, உடனே அவ ஒண்ணு எழுதணும்னு துடிப்பா. அவ ஒரு எக்ஸாம் எழுதினா, உடனே எனக்கு கை துறுதுறுனு இருக்கும். ஒரே டைம்ல ரெண்டு பேரும் பி.ஹெச்டி. பண்ணணும்னு எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை. அதுவும் இப்ப கைகூடி வந்திருக்கு. நான் ஃபினான்ஷியல் மேனேஜ்மென்ட்லயும், தனுஜா மீடியா மேனேஜ்மென்ட்லயும் பி.ஹெச்.டி பண்றோம்...’’ என்கிறார். முனைவர் அப்பா- பொண்ணுக்கு முன்கூட்டியே வாழ்த்து சொல்வோம்!
நான் பிறந்ததுலேருந்தே அப்பா படிக்கிறதைப் பார்த்திருக்கேன். வயசோ, அவர் பார்த்த வேலையோ, வேற எதுவுமோ அவரோட படிப்பார்வத்துக்குத்
தடை போடலை...
ஒரே டைம்ல ரெண்டு பேரும் பி.ஹெச்டி. பண்ணணும்னு எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை. அதுவும் இப்ப கைகூடி வந்திருக்கு...