வரி... வட்டி... வருமானம்!
ஷியும் ஜோதியும் சில நாட்களுக்கு முன்புதான் என்னுடைய வாடிக்கையாளர் ஆனார்கள். வரி கட்டுவதைக் குறைப்பது பற்றி முதலில் பேசினோம். கணக்காண்டின் இறுதியில், வரி கட்டுவதை கூடிய அளவு குறைப்பதற்காக ஆடிட்டரிடமோ, அஞ்சல் அலுவலகத்துக்கோ செல்கிறோம். வரி சேமிப்புக்காகவே பலர் சில முதலீடு துறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நிதி திட்டமிடுதலுக்கு முன்பு வரி திட்டமிடுதல் அவசியம். தவறான வரி திட்டம் நம்
செல்வத்தை அழித்துவிடும்!

ஒரு நல்ல வரி திட்டம் உங்கள் கையில் அதிக பணத்தை விட்டு வைக்க வேண்டும். உண்மையில், பலர் வரியைத் தவிர்ப்பதற்காக தேவையே இல்லாத சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து அவதிப்படுகிறார்கள். அதற்கு காரணம்...
வரி சட்டங்களை புரிந்துகொள்ளாதது.
சரியான நிதி திட்டங்கள் பற்றிய அறியாமை.
பல்வேறு திட்டங்களின் நீண்டகால விளைவுகள் பற்றிய அறியாமை.
2015-2016ம் ஆண்டின் வரி சேமிப்பு திட்டங்களை தெரிந்துகொள்வதற்குமுன், பின்வருவன பற்றி அறிவது அவசியம். வரி சேமிப்பு திட்டத்தை சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். அது உங்களின் நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்தத் திட்டம் உங்கள் நிதி ஆண்டின் ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட வேண்டும். இது வேகவேகமாக முதலீடு செய்வதைத் தவிர்க்கும்.
சொத்து ஒதுக்கீடு உங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு நிதி திட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். சரியான சொத்து ஒதுக்கீடை தீர்மானியுங்கள் (பங்குச்சந்தை, தங்கம், சொத்து விற்பனை ஆகியவை). இவையெல்லாம் பற்றி அறிந்துகொள்ளாமல் வரி சேமிப்பு திட்டங்களை தீட்டினால், அது ஆபத்தே!
நிதி சந்தை நிலவரம்பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட் (PPF), தேசிய ஓய்வூதிய திட்டங்கள் (National Pension Scheme) போன்றவற்றில் சந்தை மந்தமாக இருக்கையில் சேமிப்பது நன்று. இது போன்று கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நிதி இலக்குகள்வரி சேமிப்பதற்காக சொத்தில் முதலீடு செய்தால், திடீரென பணம் தேவைப்படும்போது, அதை விற்பது மிகவும் கடினம். நிதி திட்டத்துக்கு ஏற்றவாறு வரி திட்டத்தையும் அமைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆண்டின் நிதி சட்டங்கள்வரி சட்டங்கள் ஒவ்வொரு வருடமும் மாறும். அதில் கவனம் கொள்வது அவசியம். 2015-2016ம் ஆண்டின் வரவு-செலவு கணக்கில், ரூ.50
ஆயிரம் வரை வரியை குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அடிப்படை விதிவிலக்கு ₹2,50,000
80C பிரிவின் விலக்கு ₹1,50,000
80CCD பிரிவு (NPS) ₹50,000
மருத்துவச் செலவு ₹15,000
போக்குவரத்து செலவு ₹19,200
மருத்துவக் காப்பீடு (சுய) ₹20,000
மருத்துவக் காப்பீடு (பெற்றோர்) ₹ 30,000
வீட்டுக் கடன் வட்டி ₹ 2,00,000
எல்லோருக்கும் தெரிந்த ஒரு வரிவிலக்கு 80C பிரிவு. இப்பிரிவின் விலக்குகளின் ஒன்றுதான் பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட். வீட்டுக்கடனின் வட்டியும் வரியை சேமிக்க உதவும். நீங்கள் வேலை செய்ய ஆரம்பித்த உடனே, இந்தக் கடனை பெற்று வரியை சேமிப்பது நன்று. மற்ற கடன்களை நன்கு ஆலோசித்த பிறகுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான கவனம் செலுத்தாவிட்டால் அதிக கடனில் சிக்கி விடுவீர்கள். இது உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். உங்கள் நிதித் திட்டம் மற்றும் சொத்து ஒதுக்கீடை மனதில் வைத்துக்கொண்டு, உங்களின் முதலீடுகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்களால் எல்லா வரியையும் தவிர்க்க முடியாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வரித் திட்டங்கள் உங்களுக்கு ெசாத்து சேர்ப்பதற்கு உதவியாக அமையும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.நிதி ஆலோசகரிடம் உங்களின் நிதி தேவைகளையும் சொல்வது அவசியம். அவர்கள்
உங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு வரித் திட்டங்களை தீட்டி உங்களுக்கு உதவி செய்யுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் உங்களுக்கு லாபகரமாக அமையும்.
ஒரு நல்ல வரி திட்டம் உங்கள் கையில் அதிக பணத்தை விட்டு வைக்க வேண்டும். உண்மையில், பலர் வரியைத் தவிர்ப்பதற்காக தேவையே இல்லாத சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து அவதிப்படுகிறார்கள்.
(பத்திரப்படுத்துவோம்!)