இயல் இசை நாடகம் சிறப்பிதழ் முத்தமிழின் சுவை... முக்கனியின் தித்திப்புப் போல இனித்தது.
- ப.நந்தினி, திருவண்ணாமலை-1., ப.முரளி சேலம்-1 மற்றும் கீதா நடராஜன், தஞ்சை-1.

‘கூல் ரெசிபி 30’ இணைப்பு அருமை.
- தனலட்சுமி சந்திரசேகரன், சென்னை-50.
அட்டையில் ஸ்ருதி ஹாசன்... படு அசத்தல்! பத்மாசனியின் கருத்துகளும் புகைப்படங்களும் கலக்கல். ‘ட்வின்ஸ்’ இதழுக்கு இதழ் தூண்ட வைக்கும் எதிர்பார்ப்பு! ‘உங்களை நேசிக்க மறந்து விடாதீர்கள்’ ரேணு மகேஸ்வரி சொன்னது யதார்த்தம்.
- ராஜி குருஸ்வாமி, சென்னை-88 மற்றும் சங்கீதா என்.தர், பெங்களூரு-43.
ஆச்சி மனோரமா, பூபதிக்கு தந்தையுமானவர் மட்டுமல்ல... காவல் தெய்வமே!
- அ.பிரேமா, சென்னை-68., ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16., சுகந்தா ராம், சென்னை-59., பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்., சு.நவீனாதாமு,
பொன்னேரி மற்றும் கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
ஆட நம்பிக்கை தரும் மாலா பரத், கஸல்-பஜன்ஸில் கலக்கும் பத்மலதா, கட்டைக்கூத்து ஹேமலதா-தமிழரசி, சங்கீத சுதா ராஜா, பெண்கள் நாடகம் நடத்தும் பாம்பே ஞானம்... அத்தனை பேரும் இதழுக்குப் பொருத்தமாக பெருமை சேர்த்திருப்பவர்கள்.
- ரேவதி ராகவன், சென்னை-47.
செடிகளையும் மலர்களையும் பற்றி மட்டுமல்ல... வண்ணங்களையும் நம் மனது எப்படி கிரகித்துக் கொள்கிறது என்பதை அற்புதமாக பதிவு செய்திருந்தார் சூர்ய நர்மதா.
- பிரதிபா வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.
‘நீங்கதான் முதலாளியம்மா’வில் நீரிழிவுக்காரர்களுக்கான இன்ஸ்டன்ட் உணவையும் ஆர்டரின் பேரில் கீதா என்பவர் செய்து தருகிறார் என்பது நல்ல செய்தி.
- மயிலை கோபி, சென்னை-83.
பெண் வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர் கெர்டர் லெர்னர் கட்டுரை பெரிதும் கவர்ந்தது.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18 மற்றும் பி.வைஷ்ணவி, சென்னை-68.
துணிச்சல் வேண்டும், எக்காரணம் கொண்டும் சுய கௌரவத்தையும் நேர்மையையும் சமரசம் செய்து கொள்ளலாகாது என தோழிகளுக்கு எடுத்துரைத்திருக்கிறார் வாஸந்தி.
- கீதா பிரேமானந்த், சென்னை-68 மற்றும் என்.ஜெயம் ஜெயா, கோவை-4.
‘அதிகரிக்கிறதா இளம் வயது திருமணம்’ சொன்ன புள்ளிவிவரங்கள் திகைக்க வைத்தன.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
முனைவர் ஹேமா அருணாச்சலம் மூர்த்தியின் கருத்துகள் தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் அளித்தன.
- வத்சலா சதாசிவன், சென்னை-64.
மலாலா தொடர் நம்மை மயக்கும் மேஜிக் என்பதில் சந்தேகமில்லை.
- பூரணி நடேசன், சென்னை-64 மற்றும் சி.கார்த்திகேயன், சாத்தூர்.
புதிதாக வாஷிங் மெஷின் வாங்க விரும்புகிறவர்களுக்கு அது குறித்த விரிவான விளக்கத்தைத் தந்துவிட்டது கிர்த்திகா தரனின் ‘எது ரைட் சாய்ஸ்?’
- மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி-9., எஸ்.ஜானகி, உடுமலைப்பேட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை, எம்.செல்லையா, சாத்தூர்.
‘ஆரோக்கியப் பெட்டகம்’ பகுதியில் வெங்காயத்தால் ஏற்படும் நன்மைகள், அளவுக்கு அதிகமானால் ஏற்படும் விளைவுகளை விளக்கியிருந்தது அருமை. ‘அழுது தீர்க்க அறைகள் வாடகைக்கு’ புதுமை. ஜேசிபி இயக்கும் கார்மல் மங்களம் ஆச்சரியம். ‘என்ன எடை அழகே!’ பயனுள்ள பகுதி. இளம்பிறையின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ சுவாரஸ்யம்.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம் மற்றும் இல.வள்ளிமயில், மதுரை-6.
‘இது இங்கிலீஷு குண்டக்க மண்டக்க’... வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ‘தங்கத் தகவல்கள்’ அத்தனையும் விலை மதிக்க முடியாதவை.
- சுகந்தி நாராயண், சென்னை-39.