இளமை திரும்புதே!



ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் அழகாகவும் தன் சருமம் பிரகாசமாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல அழகு பொருட்கள் மார்க்கெட்டில் குவிந்திருக்கிறது. இது போதாது என்று வீட்டில் இருந்தபடியே சிம்பிளான அழகு குறிப்புகள் கொண்டு தங்களின் சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலர் டிப்ஸ் வழங்கி வருகிறார்கள்.

எதை பின்பற்றுவது, எதை விடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தாலும், என்றும் இளமையாக தோன்ற வேண்டும் என்றுதான் இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே வரப்பிரசாதமாக ‘மேகன்’ என்ற ஹைக்ப்ரீக்வென்சி ஃபேஷியல் சிகிச்சையினை அறிமுகம் செய்துள்ளது சென்னையில் பிரபல சலூனான வர்வ். ஸ்கின்டோர் என்ற நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த ஹைக்ப்ரீக்வென்சி ஃபேஷியல் சிகிச்சையினை தங்களின் அனைத்து கிளைகளிலும் அறிமுகம் செய்துள்ளார் சலூனின் நிறுவனரான மனோஜ்.

‘‘வர்வ் ஆரம்பித்து பத்து வருடங்களாகிறது. ஐ.டி துறையில் நானும் என் மனைவியும் பணிபுரிந்து வந்தாலும், சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. முதலில் என் மனைவி வேலையை ராஜினாமா செய்துவிட்டு ப்யூட்டி சலூன் ஒன்றை பிரான்சைசி எடுத்தார். ஒரு நான்கு மணி நேரம் அதில் செலவிட்டால் போதும் என்று நினைத்தவங்க, முழு மூச்சாக அதில் இறங்க ஆரம்பித்தாங்க.

இரண்டாவது கிளை பிரான்சைசி எடுத்த போது நானும் அவருடன் இணைய ஆரம்பித்தேன். அதன் பிறகு நானும் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இருவரும் இணைந்து சொந்தமாக ப்யூட்டி சலூனை துவங்கினோம். 

அப்படித்தான் வர்வ் உருவானது. ஒரு கிளை என துவங்கி சென்னை, கொச்சி என எங்க சலூனின் கிளைகள் விரிவடைந்தது. அதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்கள் எங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் எங்களிடம் இருக்கும் ஸ்டைலிஸ்ட் மற்றும் ப்யூட்டி தெரபிஸ்ட்’’ என்றவர், தற்போது அறிமுகம் செய்திருக்கும் ஹைக்ப்ரீக்வென்சி ஃபேஷியல் குறித்து விவரித்தார்.

‘‘பொதுவாக ப்யூட்டி சலூன் என்றால் அங்கு முடி திருத்தம், புருவம் திருத்தம், ஃபேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர் போன்ற சேவைகள்தான் இருக்கும். நாங்க காலத்திற்கு ஏற்ப எங்களின் சேவைகளை நாங்க புதுப்பித்துக் கொள்ள விரும்பினோம்.

அதன் அடிப்படையில்தான் ஹைக்ப்ரீக்வென்சி ஃபேஷியலை அறிமுகம் செய்திருக்கிறோம். இது ப்யூட்டி சலூனில் மேற்கொள்ளப்படும் சாதாரண ஃபேஷியலுக்கு ஒரு படி மேல் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுதும் ஒரு சிறந்தமாற்றத்தினை கொடுக்க முடியும்.

ப்யூட்டி சலூனுக்கு என்றுமே தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தாலும், காலத்திற்கு ஏற்ப நாம் தொழிலை அப்கிரேட் செய்ய நினைத்த போது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிக்ன்டோர் நிறுவனம் பற்றி தெரிய வந்தது. இவர்கள் சருமத்தின் தன்மை மற்றும் பிரச்னைக்கு ஏற்ப பல அழகு சாதனப் பொருட்களை தயாரித்து வருகிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்புதான் ‘மேகன்’ என்ற ஹைக்ப்ரீக்வென்சி ஃபேஷியல் சிகிச்சை முறை.

அதை நான் என் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க விரும்பினேன். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜார்டி மார்சிலோவினை சந்தித்து மேகனை இங்கு அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து பேசினேன். அவரும் சம்மதிக்க மேகன் எங்களின் அனைத்து சலூனிலும் அறிமுகமானது. 

இதற்கான பயிற்சியினை ஸ்கின்டோர் நிறுவனத்தின் புதுமை மேலாளர் பெப்பி எங்களின் நிபுணர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளித்தார். அதில் இயந்திரத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று முழுமையாக புரிந்து கொண்டு இப்போது வாடிக்கையாளர்களுக்கு மேகனின் முழுமையான சேவையை வழங்கி வருகிறோம்’’ என்றவரை தொடர்ந்த பெப்பி அதன் செயல்பாட்டினை விவரித்தார்.

‘‘நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு சருமம்தான். அதனை கவனமாக பராமரிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டுதான் நாங்க பல வித சரும பராமரிப்பு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறோம். 

இவை பெரும்பாலும் சருமத்தின் மேல் புறத்திற்கு பாதுகாப்பு தரும். ஆனால் சருமத்தின் உள்ளிருந்தே அதற்கான ஊட்டத்தினை கொடுக்க விரும்பினோம். அதுதான் மேகன். இது ஒரு ஹைக்ப்ரீக்வென்சி ஃபேஷியல். இதனை மேற்கொள்ளும் போது சருமத்தில் பல மேஜிக்கினை காணமுடியும். இன்று பெரும்பாலான பெண்கள் அழகாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் தோன்றவே விரும்புகிறார்கள்.

இவை அனைத்துக்கும் இது தீர்வு அளிக்கக்கூடியது. இந்த ஒரு இயந்திரம் மூலம் முகத்தில் உள்ள கருவளையம், சுறுக்கம் நீக்கி, சருமத்திற்கு தேவையான கொலாஜினை அதிகரித்து, சருமம் தொய்வடையாமல் செய்ய முடியும். முகம் மட்டுமில்லாமல் தளர்வான மார்பகம், பிரவச சமயத்தில் தோன்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ், கருவளையம் போன்றவற்றையும் சீராக்க முடியும். வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்று புரிந்துகொண்டு அதன் படி இயந்திரத்தில் செயல்படுத்த வேண்டும்.

எல்லோருடைய சருமம் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும். ஒரு சிலருக்கு கரும்புள்ளி பிரச்னையால் சருமம் பொலிவிழந்து காணப்படும். சருமத்தில் குறை இல்லை என்றாலும் கருவளைய பிரச்னை இருக்கலாம். முதலில் சருமத்தின் தன்மையை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சையினை வழங்க வேண்டும். இந்த இயந்திரத்தில் உள்ள இயக்கங்கள் மூலம் நாம் முகத்தில் மசாஜ் செய்யும் போது அது சருமத்திற்குள் ஊடுருவி செல்லும், விளைவு கொலாஜன் அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடனடி பொலிவினை அளிக்கும்.

எந்த ஒரு சருமமாக இருந்தாலும் முதலில் அதனை கிளன்ஸ் செய்ய வேண்டும். இது சருமத்தில் உள்ள மேக்கப் மற்றும் அழுக்கினை நீக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மில்க் கிளன்சர் பயன்படுத்தலாம். சருமத்தை மிருதுவாக்கும். அடுத்து ஸ்கிரப், இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். 

அதன் பிறகு சருமத்தில் ஈரப்பதம் தக்கவைத்துக்கொள்ள தர்மல் வாட்டர் கொண்டு ஸ்ப்ரே செய்ய வேண்டும். சருமம் பளிச்சிட கான்சென்ட்ரேட் கொண்டு மசாஜ் செய்த பிறகு ஹைக்ப்ரீக்வென்சி ஜெல்லினை சருமத்தில் தடவி இயந்திரத்தில் உள்ள இயக்கம் கொண்டு 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதில் மிதமான வெப்பம் வெளியேறும்.

அதன் மூலம் ஜெல் சருமத்திற்குள் சென்று கொலாஜினை அதிகரிக்க உதவும். இந்த வெப்பத்தின் அளவினை சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். சிகிச்சையின் போது உடலில் இருந்து வெப்பம் வெளியேறும் என்பதால் அதனை தணிக்க முதுகுப் பகுதியில் கூலிங் பேட்டினை வைக்க வேண்டும். 

கடைசியாக LED சிகிச்சை. அதற்கான ஜெல்லினை சருமத்தில் தடவி தேவையான LED கதிர்களை சருமத்தில் செலுத்த வேண்டும். இந்த கதிர்கள் கண்களை பாதிக்கும் என்பதால், கண்களை மாஸ்க் கொண்டு மறைத்துவிட்டு செலுத்த வேண்டும். LED கதிர்கள் மூன்று நிறங்களில் வரும். பச்சை சருமத்தில் உள்ள பிக்மென்டேஷனை நீக்கி பிரகாசமாக்கும். சிவப்பு மற்றும் நீலம், சருமத்தை இருக்கமாக்கும்.

இந்த சிகிச்சையினை 25 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். சருமத்தின் தன்மைக்கு ஏற்ப மாதம் இருமுறை அல்லது ஒரு முறை இதனை தொடர்ந்து எடுத்து வந்தால் கண்டிப்பாக உங்களின் சருமத்தில் நல்ல மாற்றத்தினை உணர முடியும். சிகிச்சைக்கு பிறகு மாய்சரைசர் மற்றும் சருமத்திற்கான சீரம்களை பயன்படுத்த வேண்டும்’’ என்றார் பெப்பி.

ஷன்மதி

வாசகர் பகுதி

பூக்கள் சூடுவதன் பயன்!


பூக்களின் நறுமணம் நம்மிடையே நற்சிந்தனைகளை நல்லெண்ணங்களை எழுப்பும். எனவே பூக்களின் இடையே வாழ்தலே நன்று. எப்போதும் நம் கையில் ஆலயத்தில் அல்லது வீட்டில் பூஜித்த பூ பிரசாதங்களை வைத்திருக்க வேண்டும்.கோயில் பிரசாதம் கையில் இருந்தால் தீய சக்திகள் ஒரு போதும் அண்டாது. இது காப்பு ரட்சையாகவும் செயல்படுகிறது. மகான்களும் குங்குமம், அட்சதை போன்றவற்றை வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள். காரணம், அவர்களுடைய ஆசியை நேரடியாக பெறும் யோகசக்தி மனப்பக்குவமும் நமக்கு இல்லாததால் இடையில் புனித சக்தி நிறைந்த பூக்கள் பயன்படுகின்றன. பூக்கள் புனிதமானவை.

ஒவ்வொரு பூவும் நிறத்தால், மணத்தால், வண்ணத்தால் பலருக்கும் ஆனந்தம் தந்து கடைசியில் தானே காய்ந்து ஒரே நாளில் முக்தி அடைவதாய் ரிஷிகளும் யோகிகளும் சொல்கிறார்கள்.
பெண்கள் பூக்கள் சூடிக் கொள்வதும், பூ தொடுப்பதும் ஒரு புனிதமான காரியம். கட்டிய பூக்களை வாங்கி சூடிக்கொள்வதை விட உதிரிப்பூக்களை வாங்கி அதை தொடுப்பது ஒரு தவம். அதனால்தான் இன்றும் பல வீடுகளில் பூக்கள் வாங்கி தொடுப்பதை ஒரு தவமாக செய்து வருகிறார்கள்.இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த பூக்களை நாமும் வாங்கி தொடுத்து இறைவனுக்கு சார்த்தி நாமும் தலையில் சூடி மகிழ்வோமாக.

- எஸ்.நிரஞ்சனி, சென்னை.