ப்ரியங்களுடன்...
*பூசணிக்காயை திருஷ்டி கழித்து விட்டு ஓரம் கட்டி விடுவது எவ்வளவு தவறு என்பதினையும், அதன் மருத்துவக் குணங்களையும் படித்து வியந்தோம். - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
*‘புத்தாண்டு ஸ்பெஷல் இனிப்புகள்’ சமையல் ஆர்வலர்களுக்கு அரிய வரப்பிரசாதம்!
- கே.எல்.பகவதி, சென்னை.
*‘ரீவைண்ட் 2024’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு நிகழ்ந்தேறிய 23 முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு எக்ஸலண்ட்! சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை பொருள்பட நினைவுகூர வைத்திருந்தது.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
*கைத்தறி புடவைகளின் அழகே தனிதான். கைத்தறி புடவைகளை ‘டார்கெட்’ ஆக வைத்துள்ள பவித்ராவுக்கு வாழ்த்துகள்!
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
*தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் பெருமைமிக்க அடையாளமாக திகழும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்து பிரமித்தேன்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
*ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தாற்போல் ருசிக்கத்தக்க உணவகம், ரசிக்கத்தக்க வீட்டு அலங்கார தொழில் இரண்டையும் கலந்து கட்டி அசத்தி வரும் தோழிகள் அனிதா-திவ்யாவின் திறமைக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
*‘சிறு தானிய லட்டு தயாரிப்பில் லாபம் ஈட்டும் தம்பதியினர்’ தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் போதும். கண்டிப்பாக முன்னேறலாம். தன்னந்தனியாக வேலை செய்து லட்டுகள் செய்து வினியோகம் செய்து, பிறகு 10 பெண்களை வைத்து வியாபாரம். சூப்பர் சிறப்பு!
- வண்ணை கணேசன், சென்னை.
*பேக்கரி தொழிலில் கலக்கி வரும் சாஃப்ட்வேர் என்ஜினியர் ரக்தி, முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறார். நாமும் எடுத்த தொழிலில் முழுமையாக முயற்சிப்போம். சாதிப்போம்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
*ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வேணி மற்றும் வீரச்செல்வி இருவரும் சிலப்பதிகாரம் முழுவதையும், 4 மணி நேரத்தில் பாராயணம் செய்து சாதனை ஏற்படுத்தியது பாராட்டுக்குரியது.
- ஜெயம் ஜெயா, காரமடை.
*வெளிநாட்டவர்கள் இங்கு வந்து ஆட்டோ விரும்பி ஓட்டுகிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. தொடரட்டும். தேசிய அளவில் கராத்தேயில் தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவி நித்திலா உண்மையிலேயே சாதனையாளர்தான். வாழ்த்துவோம் நாமும்.
- பானுமதி வாசுதேவன், மேட்டூர்.
அட்டைப்படம்: திரிஷாலா நஹர், புகைப்படம்: விகாஸ்ராஜா, மேக்கப்: பிரக்கிருதி ஆனந்த்
|