சிட்டி ஆஃப் காட்பிரேசிலில் கடற்கரையை ஒட்டியிருக்கும் மிகப்பெரிய நகரம் ரியோ-டி-ஜெனிரோ. அங்கே தீப்பெட்டியை அடுக்கி வைத்திருப்பதைப் போன்ற வீடுகள். குற்றத்தின் பிறப்பிடமாக இந்த இடத்தைச் சொல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு இங்கே வாழும் சிறுவர்கள் மற்றும் அவர்களின் வாழ்வைப் பற்றி ‘சிட்டி ஆஃப் காட்’ என்ற படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.