டனகில் டிப்ரஷன்எத்தியோப்பியாவின் வடகிழக்குப் பகுதியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது டனகில் டிப்ரஷன். உலகின் அதிக வெப்பமுடைய பகுதி. கடல் மட்டத்துக்குக் கீழே 100 மீட்டர் ஆழம், வறண்ட நிலை, பல ஆண்டுகளாக மழையின் வாசனையையே அறியாத நிலம், எப்போதாவது கொஞ்சம் மழை பொழிகிற அதிசய பூமி என டனகில்லைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.  உலகின் விருந்தோம்பல் தன்மையற்ற தரிசு நிலம், சூழல் என இதனைச் சொல்கிறார்கள். இருந்தாலும் டனகிலைத் தரிசிக்க மக்கள் வருவதுதான் இதில் ஹைலைட்.