வைரல் சம்பவம்ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒரு பெண் கொடுத்த விவாகரத்து வழக்குதான் இணையத்தில் ஹாட் வைரல். இத்தனைக்கும் அந்தப் பெண்ணை கணவர் எந்தக் கொடுமையும் படுத்தவில்லை. வரதட்சணை கேட்கவில்லை. வீட்டைக் கூட்டுவது முதல் சமையல் வரை எல்லா வேலையையும் கணவரே பார்த்திருக்கிறார். அந்தப் பெண் ஏதாவது தவறு செய்தால் கூட அதை பெரிதுபடுத்தாமல் மன்னித்துவிடுவாராம்.

சண்டையே போடுவதில்லையாம். ‘‘அவர் என் மேல கோபமே பட மாட்டேங்கிறார். எல்லா வேலையையும் அவரே பார்த்துக்கொள்கிறார். ஒரு வாக்குவாதம் கூட இல்லை. இது எனக்கு சலிப்பாக இருக்கிறது...’’ என்று சொல்லி விவாகரத்து கேட்டிருக்கிறார் அந்தப் பெண். இந்த விவாகரத்து வழக்கு அரபு நாடுகளையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.