64 எம்பி கேமரா போன்



இந்திய வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்த ஒரு ஸ்மார்ட்போன் ‘ரெட்மி’. எண்ணற்ற மாடல்களை களமிறக்கியதோடு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையிலும் தனக்கான ஓர் இடத்தை ஆழமாகப் பிடித்துக்கொண்டது ‘ரெட்மி’. ஒவ்வொரு மாடல் ரிலீசாகும்போதும் ஒரு மாதம் கவனமாக வாடிக்கையாளர்களின் விமர்சனத்தைக் கவனிக்கிறது.

வாடிக்கையாளர் கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பரிசீலித்து அடுத்த மாடலில் அந்த குறைகளை நிவர்த்தி செய்கிறது ‘ரெட் மி’. அப்படி வாடிக்கையாளர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை எல்லாம் சரிசெய்து ‘ரெட்மி நோட் 8’, ‘ரெட்மி நோட் 8 ப்ரோ’ என இரு மாடல்களை இறக்கியுள்ளது. இப்போது ‘ரெட்மி நோட் 8 ப்ரோ’வில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்ற தகவல்கள் மட்டுமே கசிந்துள்ளன.

1080 பிக்ஸல் ரெசல்யூசனுடன் 6.53 இன்ச்சில் மெகா டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், சீக்கிரத்திலேயே முழுமையாக சார்ஜ் ஆகவும், நீண்ட நேரம் சார்ஜ் குறையாமல் இருக்கவும்  4,500mAh பேட்டரி திறன், 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், அதாவது இரண்டு வெர்சனலில் இந்த போன் வெளியாகிறது. தவிர, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்.

குவாட் செட்- அப்பில் 64 எம்பியில் பிரமாண்ட பின்புற கேமரா, 8 எம்பியில் வைடு ஆங்கிள் கேமரா, தவிர, 2 எம்பியில் இரண்டு கேமராக்கள். செல்ஃபி கேமராவும் உண்டு. ஆனால், அதைப் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. 3.5mm ஆடியோ ஜாக், 199 கிராம் எடை என அழகான வடிவமைப்பில் அசத்துகிறது இந்த போன். விலை ரூ. 18,000- ரூ.21,000.