வெள்ளை சொர்க்கம்ஆஸ்திரேலியாவின் விட்சண்டே தீவை அலங்கரிக்கிறது வைட்ஹெவன் கடற்கரை. படகு, ஹெலிகாப்டர், கடல் விமானம் மூலமாகத்தான் இங்கே வர முடியும். பளீர் என கண்களில் மின்னும் வெள்ளை மணல் இதன் ஸ்பெஷல்.
இரவு நேரத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பைப் போல ஒளிர்கிறது இந்த மணல். நீலமும் பச்சையும் கலந்த வண்ணத்தில் இருக்கும் கடல் நீர் கொள்ளை அழகு. தூய்மையான கடற்கரை, அழகான கடற்கரை என பல விருதுகளை அள்ளியிருக் கிறது. இங்கே நாய்களுக்கு அனுமதியில்லை. புகைபிடிக்கக்கூடாது. சுற்றுலாப் பயணிகளையும் குறைந்த அளவே அனுமதிக்கிறார்கள்.