வளைந்த காடுபோலந்தின் வடமேற்கில்  உள்ளது கிரிஃபினோ என்ற நகரம். அங்கே சென்று யாரிடம் கேட்டாலும் வளைந்த காட்டுக்கு வழி சொல்வார்கள். ஆம்; அந்தக் காட்டுக்குள் நானூறுக்கும் அதிகமான பைன் மரங்கள் இருக்கின்றன.
அனைத்து மரங்களும் நேராக இல்லாமல், 90 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கின்றன. ஏன் இப்படி இந்த மரங்கள் வளைந்திருக்கின்றன என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. 1930-களில் இந்த மரங்களுக்கான விதைகள் தூவப்பட்டன. உலகப் போர் வரவே மரங்களை யாரும் கவனிக்கவில்லை.