எலிஸபெத் கில்பர்ட்அமெரிக்காவின் சமகால எழுத்தாளர்களில் முக்கிய மானவர் எலிஸபெத் கில்பர்ட். 2008- ம் வருடம் ‘டைம்’ பத்திரிகையின் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக இடம் பிடித்தார். இவரின் ‘Eat, Pray, Love: One Woman’s Search for Everything Across Italy, India and Indonesia’ என்ற புத்தகம் விற்பனையில் சக்கைப்போடு போட்டது.

உலகத்தைச் சுற்றி வந்தால் மட்டுமே இப்புத்தகத்தை உயிரோட்டமாக எழுத முடியும். ஆனால், எலிஸபெத்தின் கையில் பணமில்லை. பதிப்பகத்தாரிடமிருந்து இரண்டு லட்சம் டாலரை அட்வான்ஸாகப் பெற்று, உலகைச் சுற்றி வந்து இப்புத்தகத்தை எழுதினார் எலிஸபெத்.


‘த நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வாரந்தோறும் அதிக விற்பனையான புத்தகங்களின் பட்டியலை வெளியிடும். அந்தப் பட்டியலில் தொடர்ந்து 187 வாரங்கள் இடம்பிடித்து வரலாறு படைத்தது ‘Eat, Pray, Love’. பிறகு இப்புத்தகம் திரைப்படமாக்கப்பட்டு வசூலிலும் சாதனை புரிந்தது. இத்தனைக்கும் எழுத்துப் பின்புலம் இல்லாத ஒரு நடுத் தரக் குடும்பத்தில் பிறந்தவர் எலிஸபெத்.

சமையல்காரி, பாரில் மதுபானம் விநியோகித்தல், ஹோட்டல் பணி, பத்திரிகையாளர் என பல வேலைகளைப் பார்த்தபோது கிடைத்த அனுபவத்தில் இருந்து தன் கதைகளை உருவாக்குகிறார் எலிஸபெத். அதனாலேயே அவரது எழுத்து நினைவுகளை மீட்டிப் பார்ப்பதாக உள்ளது.

‘‘லிட்ச்பீல் டில் கிறிஸ்துமஸ் மரங்கள் நிறைந்த ஒரு பண் ணைக்கு  நடுவில் உள்ள சிறிய வீட்டில் நானும் என் சகோதரியும் வளர்ந்தோம். எங்களின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு வீடு கூடக் கிடையாது. தொலைக்காட்சி, ரெக்கார்டு பிளேயர் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் எங்கள் வீட்டில் இல்லை. வாசிப்பது மட்டுமே எனக்கும் அவளுக்குமான ஒரே பொழுதுபோக்கு.

பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்தபிறகு நாங்கள் இருவரும் எதையாவது வாசித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்போம். குழந்தைப்பருவத்தில் பொழுதுபோக்காக இருந்த எழுத்து இன்று என் வாழ்க்கையாகவே மாறிவிட்டது...’’ என்கிறார் எலிஸ்பெத். மகிழ்ச்சி வெளியில் இல்லை.

நமக்கான மகிழ்ச்சி நம்மிடம்தான் உள்ளது. ஆனால், அது அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை. நம்முடைய தனிப்பட்ட முயற்சி களின் விளைவுதான் மகிழ்ச்சி. நீங்கள் அதற்காக சண்டை போட வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், போராட வேண்டும் என்பதே அவரது எழுத்தின் சாரம்.