சாம்பியன்கடந்த வாரம் முழுக்க பி.வி.சிந்துவைப் பற்றித்தான் பேச்சு. உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில் முதன் முதலாக தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.
ஆனால், அதே நேரத்தில் கடந்த வாரம் சுவிட்சர்லாந்தில் நடந்த உடல் ஊனமுற்றவர்களுக்காக பாரா- பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் மானஸி ஜோஷி. பெரிதாக யாரும் இவரைப் பற்றி பேசவில்லை என்ற குற்றச்சாட்டை பலரும் இணையத்தில் எழுப்பி வருகின்றனர்.

ஆறு வயதிலிருந்து பேட்மின்டன் விளையாடி வரும் மானஸி எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். 2011-இல் நடந்த ஒரு சாலை விபத்தில் தனது இடது காலை இழந்துவிட்டார். இருந்தாலும் துவண்டு போகாமல் பேட்மின்டன் விளையாட்டில் தீராத கவனம் செலுத்தி வருவதோடு பதக்கங்களைத் தட்டி நாட் டுக்குப் பெருமை சேர்க்கிறார் இந்த சாம்பியன். இவரது வயது 30.