தங்க மகள்இதோ இந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம். அதுவும் ஒரு தமிழ்ப்பெண்ணால். ஆம்; பிரேசிலின் ரியோ டி ஜெனி ரோ நகரில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதித்திருக்கிறார் இளவேனில் வாலறிவன். இவர் தமிழகத்தில் உள்ள கடலூரில் பிறந்தவர்.

72 நாடுகளைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உலகக் கோப் பைத் தொடரில் பங்கேற்றனர். வெறுமனே பதக்கங்களைத் தட்டு வது இவர்கள் நோக்கமல்ல. மாறாக 2020-இல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதற்கான ஒரு வாய்ப்பாகவும், தகுதிச் சுற்றாகவும் இந்த உலகக் கோப்பை போட்டிகள் இருந்தன. அதில்தான் தன்னை நிரூபித்திருக்கிறார் தங்க மகள் இளவேனில்.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகளைத் தட்டி  தங்கம் அடித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றவர் இளவேனில் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வயது 20.