விசித்திர விஞ்ஞானிகறியை வெட்டப் பயன்படுத்தும்  கத்தியில் மொபைல் கவர், பழைய ஸ்கூட்டரில் கழிப் பறை, மசாஜ் செய்துவிட இரும்புக் கைகள் என விநோதமான பொருட்களைக் கண்டுபிடித்து விஞ்ஞானியாக வலம் வருகிறார் ஜெங் ஷுவாய். மக்கள் இவரை ‘யூஸ்லெஸ் எடிசன்’ என்று கிண்டலடிக்கின்றனர். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் முழுமையாக ஈடுபடுகிறார் ஜெங்.

சீனாவில் பிறந்த ஜெங் ஒரு வெல்டர். வேலையைத் துறந்து விட்டு கண்டுபிடிப்புகளில் இறங்கிவிட்ட இந்த விஞ்ஞானியின் வயது 30. தாமஸ் ஆல்வா எடி சனுக்குக்  கிடைக்காத  ரசிகர் பட்டாளம் இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஆம்; இணையத்தில் ஜெங்கை லட்சக்கணக்கான பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

இவரின் வீடியோவில் வெளியாகும் விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார்.  ‘‘நான் உருவாக்கும் பொருட்கள் எதற்கும் பயன்படாதது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவை மகிழ்ச்சி தரும் சாதனங்களாகவும் நம் பொழுதைப் போக்கும்  நிகழ்வாகவும் இருக்கின்றன...’’ என்கிற ஜெங்கிற்கு பிடித்த விஞ்ஞானி டெஸ்லா.