ஒரு படம் ஒரு ஆளுமை




ஈ.ம.யூ

கடற்கரையோரத்தில் வசித்து வரும் வாவச்சன் மேஸ்திரி, மகன் ஈசியோடு சேர்ந்து, மது அருந்துகிறார்.  அப்போது அவர், தன் அப்பாவுக்கு நடந்த பிரமாண்ட இறுதி ஊர்வலத்தை மகனிடம் விவரிக்கிறார். அதைவிட பெரிய சவ ஊர்வலத்தை நடத்துவதாக தந்தையிடம் வாக்கு தருகிறான் ஈசி. சில மணிநேரத்தில் வாவச்சன் இறந்துபோக ஈசி தன் சத்தியத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக் கதை.

குறிப்பிட்ட கிறிஸ்துவ சமூகத்தில் மரணப்படுக்கையில் இருப்பவரின் காதில் ஓதுகின்ற வார்த்தை ‘ஈஸோ மரியம் யௌசேப்பு’- ‘ஈ.ம.யூ.’ அந்த சமூகத்தின் ஈமச்சடங்கு அழைப்பிதழில் பிள்ளையார்சுழி போல இவ்வார்த்தை அச்சிடப்பட்டிருக்கும். இறுதிக்காரிய வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளைத்தான் பார்க்கிறோம் என்பதை மறந்து படம் சிரிக்க வைக்கிறது.

அதே நேரம்  படம்  முடிந்தபிறகு ஒரு வித துயரம் நம்மைப் பற்றிக் கொள்ள, வாழ்வின் அபத்தம் நினைவில் நிழலாடுகிறது. இதுவே படத்தின் சிறப்பு. ஒளிப்பதிவு,  திரைக்கதை,  நடிப்பு அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கும் படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

கார்லோ கொலோடி

பிரபல குழந்தை எழுத்தாளரான கார்லோ கொலோடி, இத்தாலியில் பிறந்தவர். அப்பா, சமையல்காரர். அவருடன் பிறந்த பத்து பேரில் ஏழுபேர் பால்யத் திலேயே மரணிக்கின்றனர். தனது இருபது வயதில் மொழிபெயர்ப்பாளராக இலக்கியத்துக்குள் நுழைந்த கார்லோ, பல்வேறு மொழிகளில் வெளியான குழந்தைகள் நூல்களை  இத்தாலி மொழியில்  மொழிபெயர்த்து  இலக்கிய உலகில் இடம்பிடிக்கிறார். ‘பினோக்கியா’ என்ற காலத்துக்கும்  அழியாத  நாவலை படைக்கிறார்.

இத்தாலி மொழியில் அதிகம் விற்பனை, பைபிளுக்குப் பிறகு  அதிக மொழிகளில் மொழியாக்கம், பலமுறை திரைப்படமாக்கப்பட்ட புத்தகம் என எக்கச்சக்க சிறப்புகளை உள்ளடக்கியது இப்புத்தகம். ‘பினோக்கியா’வில் கதாபாத் திரங்களின் இயல்பான எதார்த்த உருவாக்கம் குழந்தைகளை மட்டுமல்லாது வளர்ந்த குழந்தைகளையும் கவர்ந்திழுக்கிறது. மணமின்றி தனித்து வாழ்ந்த கொலோடி 63 வது வயதில் காலமானார்.

லிஜி