அறிவோம் தெளிவோம்!எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த பதினாறு ஆண்டுகளில் டெல்லியில் 2013 ஆம் ஆண்டு செப்14 அன்று பெட்ரோல் விலை 76.06 ரூபாயை எட்டியது. அடுத்து  விலையுயர்வு இவ்வாண்டின் மே மாதத்தில்தான் நிகழ்ந்துள்ளது. இது டீசல் விலை உயர்வுக்கும் பொருந்தும்.

பெட்ரோல் விலையில் 50% வரிகள்தான். டீசலில் வரி 40%. வரிகளின் விகிதம் மாறுவது மாநில அரசுகளின் வரிகளைப் பொறுத்தும் நிகழும். பெட்ரோலில் ரூ.3.61(4.8%  விற்பனை விலை உயர்வு) - டீலர் கமிஷன், ரூ. 16.01(21.3%) - வாட் வரி, ரூ.19.48(25.9%) - கலால்வரி, ரூ.36.22 (48.1%) - டீலர்கள் கட்டணம். (பெட்ரோல் விலை ரூ.75 எனும்போது)மும்பையில் பெட்ரோலும், ஹைதராபாத்தில் டீசலும் விலை அதிகம். வளர்ந்த நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் (அமெரிக்கா தவிர).

தனிநபர் வருமானத்திற்கேற்ப விலை உயர்வு இருக்கும். தற்போது இந்தியர் தன் தனிநபர் வருமானத்தில் 20% எரிபொருட்களுக்காக செலவு செய்யவேண்டியுள்ளது. உலகிலேயே தற்போது இந்தியாவில் மானியவிலையில் மக்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர் மட்டுமே விலை குறைவானது. இலங்கையில் மண்ணெண்ணெய் விலை குறைவாக உள்ளது.