சென்னை சீக்ரெட்ஸ்



டே என்ன ஆனார்?

கோட்டையின் பராமரிப்புக்கும் செலவுக்கும் கடன் வாங்கிய டே, கம்பெனியிலிருந்து தன்னை  விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மசூலிப்பட்டிணத்தில் பணிபுரிந்தவர், பின்னர் சூரத்துக்கு அனுப்பப்பட்டார். கடன் வாங்கியதற்கு மன்னிக்கப்பட்டாலும், சொந்த வணிகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

‘‘அவர் மெட்ராஸை உருவாக்கி அதே ஆண்டின் முடிவில் அலுவலகத்திலிருந்து  விடுவிக்கப் பட்டோ அல்லது ராஜினாமாவோ செய்துள்ளார். அங்கிருந்து ஜாவாவின் பாண்டம் தீவிலுள்ள கம்பெனியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு  இங்கிலாந்து திரும்பினார். ஆனால் அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது’’ என்கிறார், ‘The Story of Madras’ நூலில் க்லின் பார்லோ.

மெட்ராஸை உருவாக்கிய டேயின் கதை இது. பிறகு ஆண்ட்ரூ கோகன் கோட்டையின் பொறுப்பை முன்னின்று கவனித்தார். ஆனால், சாந்தோமில் போர்த்துகீசியர்களுக்கு பயந்தே ஆங்கிலேயர்கள் வணிகம் செய்தனர். அப்போது புயலால் ஈகிள் கப்பல் தரைதட்டி நஷ்ட மடைந்ததால் மெட்ராஸ் மீது கம்பெனிக்கு  பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால், இங்கிருந்தவர்கள் திறமையாகவே வணிகத்தை செய்து அறிக்கையும் சமர்ப்பித்து வந்தனர்.

பிகே