ராயல் திருமணம்!மேகன் அணிந்த திருமண உடையில் கலிஃபோர்னியா மாநில மலரான பாப்பி(Poppy) மற்றும் வின்டர்ஸ்வீட்(Chimonanthus praecox) உள்ளிட்ட  மலர்களின்  டிசைன் இடம்பெற்றுள்ளது. இளவரசர் ஹாரியின் உடையைத் தயாரிக்க ஒரு வாரம் பிடித்திருக்கிறது. ராணுவத்தில் ஹாரி பெற்ற மெடல்கள் உடையில் இடம் பெற்றுள்ளன.  

ஹாரி-மேகன்  திருமணச்செய்தி ட்விட்டரில் 3.4 மில்லியன் ட்விட்டுகள் எனும் எண்ணிக்கையில் பகிரப்பட்டு சாதனை படைத்துள்ளது.   நாம் புகைப்படங்களில் பார்க்கும் ஹாரி-மேகன் முத்தக்காட்சி, மேகன் “நாம் முத்தமிடலாமா?” என்று பர்மிஷன் கேட்டு ஹாரி
ஓகே செய்ததுதான்.   

அரசகுடும்பத்தின் திருமண விழாவை டெக்கான் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணையத்தில் ஒளிபரப்பியது. விரைவில் டிவிடி வடிவில் தயாராகி விற்பனையாகும்.   ஹாரி ஓட்டிவந்த ஜாகுவார் இ ரக காரின் நம்பர்பிளேட் E190518. ஆம். திருமணத் தேதிதான் கார் எண்ணும் கூட.   சமையல்கலைஞர் மார்க் ஃபிளானகனால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் எண்ணிக்கை மொத்தம் 7,500. தயாரித்த சமையல் குழுவினரின் எண்ணிக்கை 25.