பனாமாவை உயிர்ப்பிக்கும் பெண்!



பனாமாவின் எதிர்காலத்தை அமைக்க உதவும் கால்வாயை 5.2 பில்லியன் டாலர் செலவில் அமைத்து வருகிறார் எஸ்பினோ டி மரோட்டா. ஒன்பது ஆண்டுகளாக பனாமா கால்வாயில் மூன்றாவது வழித்தடத்தை உருவாக்க உழைத்து வருகிறார். பத்தாயிரம் ஊழியர்கள் கொண்ட பனாமா கால்வாய் ஆணையத்தில் பெண்களின் பங்கு 1200 தான். நான்குபேர் இதற்கான வடிவமைப்பை செய்ய, அதனை பல்வேறு நிறுவனங்களின் மூலம் நிறைவு செய்துவருகிறார் மரோட்டா.

அட்லாண்டிக் பசிபிக் வழியை இணைக்கும் பனாமாவின் வழி ஏற் கனவே பரபரப்பான ஒன்று. புதிய வழி திறக்கப்பட்டால் தற்போது செல்லும் சரக்குக் கப்பல்களைவிட பெரிய கப்பல்களை இப்பாதையில் அனுமதிக்க முடியும். 2006 ஆம் ஆண்டு அதிபர் மார்ட்டின் டோரிஜோஸ் அறிவித்த திட்டம் இது.

அமெரிக்காவில்  படித்த  மரோட்டா கடல்  உயிரியலாளராக  செயல்பட விரும்பினார். வேலை  விஷயங்களில் கவனமாக உள்ளவரின் பதினேழு வயது மகனுக்கு புற்று நோய் இருப்பது அண்மையில் தெரிவந்துள்ளது. “அனைத்து சூழல்களையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை  மிச்சமுள்ளது” என்று கூறி புன்னகைக்கிறார்  பொறியாளர் மரோட்டா.