ரப்பரில் மின்சாரம்!



ஸ்விட்சர்லாந்தின் எம்பா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ரப்பர் ஃபிலிமில் மின்சாரத்தை உருவாக்கலாம்! மெல்லிய, நெகிழ்வான ரப்பர் ஃபிலிமை நீளச்செய்தால், சுருக்கினால் மின்சாரம் உண்டாகிறது என்பதுதான்  இந்த  ஆச்சரிய கண்டுபிடிப்பு. உடைகள், ரோபோக்கள்,  கட்டுப்பாட்டு பட்டன்கள் ஆகியவற்றை  ரப்பரில் அமைத்து மின் சாரத்தை  உருவாக்கலாம். எ.கா. பேஸ்மேக்கர்.

அனலாக் பிளேயர்களில்  சிறிய ஊசி குறிப்பிட்ட  அழுத்தத்தை  இசைத்தட்டில் உருவாக்கி பின்னர் அது  ஒலியாக  மாற்றப்படுவது இந்த ரப்பர் ஃபிலிமுக்கு  ஒரு  உதாரணம். இந்த ரப்பரை பயன்படுத்தி பிரஷர் சென்சார்களை உருவாக்க முடியும்.

இம்முறையில் உருவாக்கப்படும்  கன்ட்ரோல் பட்டன்களின் அழுத்தத்தை  எளிதில் ரோபோக்கள் உணரும். “ரப்பர் ஃபிலிமை உடையாக மாற்றினால் உடலை மிகச்சரியாக கண்காணிக்கலாம்.  விரைவில் மாற்று  இதயத்தின் மூலமாக மின்சாரம்  சேமிக்கும் காலம் வரும். இதனால்  உடலில் பொருத்தப்பட்ட சாதனங்களுக்கு பேட்டரி மாற்றும் அவசியமில்லை” என்கிறார் ஆய்வாளரான ஆப்ரிஸ்.