ஆராய்ச்சி செலவு!



நூல், ஆன்லைன் கடை ஆகியவற்றுக்கான க்ளவுட் அமைப்பை டெவலப் செய்ய சராசரியாக 10 பில்லியன் டாலர்களை அமேஸான் நிறுவனம் செலவழிக்கிறது.

தானியங்கி கார்கள், சர்ச் எஞ்சின், இன்டர்நெட் பலூன்,ஏஐ,ஸ்மார்ட்போன்கள்  என  கிடைத்த   இடத்திலெல்லாம்  பிஸினஸ்  செய்யும் கூகுள் ஆராய்ச்சி களுக்கு செய்யும் தோராய செலவு, 10.5 பில்லியன் டாலர்கள்.

* டிவி, போன்கள், ஏசி, ப்ரிட்ஜ் என  அத்தனை  எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும்  அசகாயமாக தயாரித்து No.1  இடத்தில்  தன்னை தக்கவைத்துக் கொள்ளும் சாம்சங்கின் தோராய ஆராய்ச்சி செலவு, 12.6  பில்லியன் டாலர்கள்.

* டெக் நிறுவனங்களில் ஆப்பிள் 2014 ஆம்  ஆண்டு மட்டும்  6  பில்லியன் டாலர்களை ஆராய்ச்சிக்காக செலவழித்துள்ளது.