பிட்ஸ்!



அதிகாலை தூக்கத்தை கலைத்து உடலுக்கு உற்சாகம் தருவதில் காஃபியை விட ஆப்பிள் பழங்களே சிறந்தவை. ரத்தவோட்ட வேகத்தை  அதிகரிக்க ஆப்பிளிலுள்ள 13கி. ஃப்ரக்டோஸ் உதவு கிறது.

காரின் ஸ்டீரிங் வீலை கடிகாரத்தின் 9-3 என்ற டிசைனில் கையாளுவதே சரியான முறை. ஏனென்றால் விபத்தில் திடீரென ஏர்பேக் வெடிக்கும்போது விரல்கள், மூக்கில் காயம்பட அதிக சான்ஸ் உண்டு.

மஞ்சள் நிற பனி மட்டுமல்ல, வெள்ளைநிற பனியை சாப்பிட்டாலும் உடல் பாதிக்கப்படும். ஏன்? அதிலுள்ள மாசுதான் காரணம்.

பிறந்த குழந்தைகள் குளிர் இல்லாதபோதும்  நடுங்கினால்,  உடலில் சர்க்கரை குறைந்துவிட்டதன் அறிகுறி இது; உடனே அவர்
களுக்கு தாய்ப்பால் தரவேண்டும்.

கைகளைக் கழுவி  டிஷ்யூ  பேப்பரால்  துடைப்பதே தொற்றுநோய்களிலிருந்து நம்மைக் காக்கும். டிரையரை பயன்படுத்தினால், பாக்டீரியாக்கள் நம் கை களுக்கு பரவும் வாய்ப்பே அதிகம்.