VR பிரச்னைகள்!



2015 ஆம் ஆண்டு விர்ச்சுவல் ரியாலிட்டி சந்தையில் கூகுள், சாம்சங் நுழைந்ததால் 2016 ஆம் ஆண்டு முழுவதும் விர்ச்சுவல் ரியாலிட்டி பொருட் களுக்கான ஸ்பெஷல்.

மூளையில் தகராறு!

விர்ச்சுவல் வீடியோக்களின் உலகில் தொடர்ந்து இருப்பதால் குமட்டல்,வாந்தி, வியர்வை அதிகரிப்பு, தன்னிலை இழத்தல், உடல் வெளுப்பு, தலைவலி ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன.  வி ஆர் ஹெட்செட்களை 13 வயதுக்கு  மேலுள்ள  சிறுவர்கள்
மட்டுமே பயன்படுத்தலாம்.

இயங்காத நியூரான்கள்!

எலியிடம் நடத்தப்பட்ட விஆர் சோதனையில் அதன் மூளையில் நிஜ  சூழ்நிலையைவிட வி ஆர் சூழலில் மூளையின் மிகச்சில  நியூரான்களே இயங்கின. இது மைனஸ் என்றாலும் பிற்காலத்தில் இவை தீர்க்கப்பட  சான்ஸ் உண்டு. 

தனியொரு உலகம்!

கம்ப்யூட்டரும் வீடியோ கேமுமாக இருப்பவர்கள் சமூகத்தோடு  இணைவது கஷ்டம். தனிமை,  மாறும்  மனநிலை, அன்லிமிடெட்  வன்முறை என விநோத தனி மனித குணங்கள் உருவாகும்.மைனஸ்  கடந்து,  இதில்  பிளஸ்ஸும் உண்டு. மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி பாசிட்டிவ் பலமாக உள்ளது என்கிறார் டாக்டர் மைக்கேல் டோனகன்.