இரவில் ஒளிரும் பொருட்கள்!



உங்கள் செல்லக்குழந்தையின் ரூமில் ஒட்டிவைக்கும் ஸ்டார்கள், ஏக் ருப்பீ சூயிங்கத்தின் ஸ்டிக்கர்கள் முதற்கொண்டு இரவில் பளீரென ஒளிவிடுவது பெரும் ஆச்சர்யமாக இருக்கும். சில பொருட்களில் மட்டும் ஒளிர்தல் எப்படி சாத்தியமாகிறது?

ப்ளோரசென்ட் பொருட்களை சூரியன் அல்லது டார்ச் வெளிச்சத்தில் காட்டினால் அவை புற ஊதாக் கதிர்களை ஈர்த்துக்கொண்டு வெளிவிடுகின்றன. சலவைத்தூள் புற ஊதாக்கதிர்களை உள்ளிழுத்து நீல நிறத்தில் வெளிப்படுத்துகின்றன.

சில ஒளி உமிழும் பொருட்கள் கொஞ்சம் ஸ்லோவானவை என்பதால்தான், குழந்தை களின் சுவர்களிலுள்ள ஸ்டார்கள் விளக்குகளை ஆஃப் செய்து சில நிமிடங்களுக்கு பிறகு ஷைனிங்காக மின்னுகின்றன.