படுகொலை ரகசியம்!



மர்மங்களின் மறுபக்கம்   50

நிகோலஸ், மெதுவாக அந்த கனிமச் சுரங்கத்திற்கு வந்தார் எரிக்கப்பட்ட இடத்தை ஆராய்ந்து தேடத் தொடங்கினார். ஒரு சிறிய பூட்டு, வளைந்த ஹேர்பின், நாயின் எலும்புக் கூடு  மற்றும் வெட்டப்பட்ட ஒரு விரலின் எலும்பு - என அந்த இடத்தில் கிடைத்தவை இவைதான்.

மன்னர் குடும்பம் அங்கே எரிக்கப்பட்டிருக்கிறது என்று நிகோலஸ் யூகித்தார். 1919  ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட ஆட்சி மாறுத லால் நெருக்கடிக்குள்ளான நிக்கோலஸ், சீனா  வழியாக ஐரோப்பா செல்ல நேர்ந்தது.

1924ஆம் ஆண்டுவரை நிகோலஸின் ஆராய்ச்சி வெளிவரவேயில்லை. ேபால்ஷ்விக் கட்சி மன்னரின் குடும்பத்தை படுகொலை  செய்த விஷயம் வெளியில் ஆதாரபூர்வமாக தெரியாமல் மறைந்து  இருந்தது. விஷயம் வெளியே தெரிந்தபோது பல நாடுகள் கதிகலங்கிப் போயின.

1921 ஆம் ஆண்டு மன்னரின் கடைசி நாட்களைப் பற்றியும் அவர்  மரணம் பற்றியும் சுருக்கமாக  சோவியத்  யூனியன் சேர்மன் வெளியிட்டு  உலகிற்குத்  தெரியப்படுத்தினார். அதிலும்  மன்னரின் இறுதி முடிவு பற்றி மூச்சுவிடவில்லை.

1918ஆம் ஆண்டு ஜூலை 16-17 தேதிகளில் மன்னரைக் கொலை செய்வது என்று முடிவு செய்தபோது, ராணியையும், அவளது மக்களையும் பத்திரமாக வெளியே ஓர் இடத்திற்கு அனுப்பிவிட்டார்கள் என்ற தகவல் கசிந்தது.

1918ஆம் ஆண்டு போல்ஷ்விக் அதிகாரிகள் மன்னரின் குடும்பத்தை வைத்து ஜெர் மனியிடம் பேரம் பேசினார்கள்.‘‘ஜெர்மனியில் பிறந்த அலெக்சாண்டிராவையும், அவளது குழந்தைகளையும்  நாங்கள்  உங்களிடம் ஒப்படைக்கிறோம். பதிலுக்கு நீங்கள் உங்களிடமுள்ள எங்கள் அரசியல் ைகதிகளை ஒப்படையுங்கள்’’ என்று பேரம் பேசியதாக  செய்தி.

இந்தக் கொடூரமான மரண சம்பவம் நிகழ்ந்து பல நாட்களுக்குப் பிறகு சைபீரியாவில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரி சார்லஸ் எலியட், எக்டரின்பர்க் நகருக்கு அந்நிய நாட்டுப் பிரதிநிதிகளுடன் வந்தார். முதல் வேலையாக மன்னர் ஜான், அவர் குடும்பத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்டிருக்கிறார்.

முதலில்  இந்த  மறைவைப் பற்றி விசாரித்த அதிகாரியான வைட்ஸ் சொன்ன தகவலின்படி, ராணியும், அவளது மக்களும்  எடின்பர்க் நகருக்கு  ஜூலை 17 ஆம் தேதி ரயிலில் பயணமாகிவிட்டார்கள் என்றும், அவர்கள் கொடுமையாகக் கொல்லப்பட்டார்கள் என்று உலவும் வதந்தி  பொய்யானது என்றும், வைட்ஸ் அந்த பிரிட்டிஷ்காரரிடம் சொல்லி இருக்கிறார்.

ராணி  அலெக்சாண்டிராவின் சகோதரர் எர்னஸ்ட் லுட்விக் பிரபு - ஸ்வீடன் வழியாக இங்கிலாந்திலுள்ள தன் இன்னொரு  சகோதரிக்கு அக்கா அலெக்சாண்டிரா தன் குழந்தை களுடன்  பத்திரமாக இருக்கிறாள் என்று செய்தி  அனுப்பினார். தகவல் உபயம்,  ரஷ்யாவிலிருந்த ஜெர்மன் உளவாளி. அவர்கள் எங்கும் காணவில்லை என்பதால் படுகொலையானார்கள் என்ற செய்தியை மக்களும் வேறு ஆப்ஷனின்றி நம்பினார்கள்.

1970ஆம்ஆண்டு இரண்டு பிரிட்டிஷ் பத்திரிகை ஆசிரியர்களான அன்டோனி சம்மர்ஸ்  மற்றும் டாம்  மாரிகோல்டு  இருவரும் இந்த விஷயத்தில்  ஆர்வம் காட்டி அரசு பதிவேடுகளைப் பெற்றார்கள். அதில் அவர்கள் கண்டுபிடித்தது என்ன?

(வெளிச்சம் பாய்ச்சுவோம்)