ஈகிள்ஸ் ஐ பார்வை சாத்தியமா?



மனிதர்களைவிட கழுகுகள் மற்றும்  பிற பறவைகளுக்கு பார்வைத் திறன் 5 மடங்கு அதிகம்.  கழுகுகளின் பார்வைத்திறன் பற்றி மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஹோடோஸ் என்ற ஆராய்ச்சியாளர் 1970 ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். 
கழுகின் கண்களில் ரெட்டினாவைச் சுற்றி கோட்டிங் போட்டதுபோல உள்ள கோன்களே அதன் ஹெச்டி கண்பார்வைக்கு காரணம்.

அதன் நடுவிலுள்ள ஒளியை உள்வாங்கும் அமைப்பு, டெலிபோட்டோ லென்ஸ் போல செயல்பட்டு பார்வையிலுள்ள அனைத்தையும்  கிறிஸ்டல் கிளியராக்குகிறது. பறவைகள் நம்மைவிட  துல்லியமாக  நிறங்களை அடையாளம்  காணுவதோடு  அகச் சிவப்பு கதிர்களையும் காணும் திறன் கொண்டவை. வேவ்ஃபிரண்ட் சென்சார் மூலம் வில்லியம் குழு, கண்களின்  குறைபாட்டை  நீக்கி  கழுகு  போல  பார்வைத் துல்லியம் கிடைக்க முயற்சித்து வருகின்றனர்.