சீனாவை மிரட்டும் தற்கொலை விளையாட்டு!



ஆன்லைனில் உலகை சூறாவளியாகத் தாக்கி விளையாடுபவர்களைத் தற்கொலைக்குத் தூண்டும் ‘Bluewhale’ என்ற கேமைத் தொடர்ந்து தற்போது பரவி வரும் புது கேமில் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் வித்தியாச மனப்போக்கு ராக்கெட் வேகத்தில் சீனாவில் பரவி  வருகிறது.  

தற்போது சோஷியல் தளங்களில் உதடு, கால் உள்ளிட்ட  இடங்களில் தோலில் நூலால்  எம்ப்ராய்டரி செய்து ரத்தம் சொட்டச் சொட்ட  அதனை போட்டோ  எடுத்து போடுவதுதான்  புதிய ட்ரெண்ட். இதன் முன்னோடியான ப்ளூவேல் என்ற தற்கொலை கேமினால், ரஷ்யாவில் பறிபோன உயிர்கள் மட்டும் 130 என்பது நிலைமையின் தீவிரத்தை உங்களுக்கு சொல்லும்.  

இதுதொடர்பாக உடலில் பல்வேறு உருவங்களை நூலால் எம்ப்ராய்டரி செய்யச்சொல்லி வற்புறுத்திய ஒருவரை சீன காவல்துறை கைது செய்துள்ளது. ப்ளூவேல்  என்ற கேமின் அடிப்படையும்   இதுதான். அந்த  கேமின் ரூல், தினசரி ஒரு டாஸ்க்கை  முடிக்கவேண்டும்  என்பதுதான். 49 நாட்கள் தினசரி ஒரு டாஸ்க் என  செல்லும்  விளையாட்டு 50 ஆவது நாள் அன்றைய டாஸ்க்காக கேட்பது  எக்ஸ்க்ளூசிவ்வாக   விளையாடுபவரின் உயிரை
மட்டுமே. டாஸ்க்கை  சவாலாக  எடுத்துக்கொண்டு  முடிப்பவர்கள்  மெல்ல அதில் ஆழ்ந்து உலகையே மறந்திருப்பார்கள்.

அந்நிலையில் 50 நாள் டாஸ்க்கையும் செவ்வனே நிறைவேற்றி  உயிரை விட்ட  பலநூறுபேர்தான் ப்ளூவேல்  ஆபத்தை  உலகுக்கு  உணர்த்தினார்கள். இது தொடர்பாக தற்கொலைக்குத் தூண்டிய  பிலிப் பெடயுன், “இறந்தவர்கள் அனைவரும்  உயிரியல்  கழிவுகள்,  தன்  இறப்பை தானே கொண்டாடியவர்கள்” என பகீர் பதில் சொல்லி திகில் கூட்டியிருக்கிறார். 21 வயதான அந்த  இளைஞருக்கு 3 ஆண்டுகள்  சிறை தண்டனையை ரஷ்ய நீதிமன்றம் விதித்துள்ளது.