பிரேக் இல்லாத எலக்ட்ரிக் கார்!



கார் நிறுவனங்களிலேயே நிஸான் முதன்முறையாக ஒரே ஒரு  பெடலைக்  கொண்டுள்ள காரை விரைவில் ரிலீஸ் செய்யவுள்ளது. பெடலை அழுத்தினால் கார் முன்நகரும், பெடலில் இருந்து காலை எடுத்தால் காரின் வேகம் குறைவதோடு, முழுக்க நிறுத்தவும் முடியும். மலைப்பாதையில் கார் கீழே உருண்டோடுவதை  இதன் மூலம் தடுக்கலாம்.

“எலக்ட்ரிக் கார்களில்  இது  புது முயற்சி” என்கிறார் பொறியியல் பேராசிரியரான ஜெப்ரி மில்லர். வேகம் குறைப்பதை நவீனமாக டச் ஸ்கிரீன்  மூலம்  டெஸ்லாவும், செவர்லே  போல்டில் கியரின்  மூலமும் செய்வதுபோலவும் அமைத்திருக்கிறார்கள். இதில் நிஸான் வேறுபடுவது, பிரேக் என்பதற்கு தனி  பெடலே இல்லை என்பதில்தான். பிரேக்  பயன்படுத்தாத  தன் மூலம் காற்று மாசுபடுவது குறைவதோடு, காரின் பராமரிப்புச்  செலவும்  பலமடங்கு  மிச்சமாகும்.