புத்தக அலமாரி!
CAESAR’S LAST BREATH
Decoding the Secrets of the Air Around Us by Sam Kean
384pp Rs. 1,794
Publisher: Little, Brown  

காற்றிலுள்ள பல்வேறு பகுதிப்பொருட்களை அமெரிக்காவின் ஹெலன்ஸ் என்ற எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்போடு தொடர்புபடுத்தி பேசுகிறார். பின் இரண்டாவது பகுதியில் காற்றிலுள்ள நைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களோடு மனிதர்கள் உருவாக்கும் வாயுக்களைப் பற்றிய சுவாரசிய கதைகள் அருமை. எ.கா: அனஸ்தீஸியா, பலூன். மூன்றாவது பகுதியில் பூமியில், பிற கோள்களில் உள்ள வாயுக்
களைப் பற்றிய சுவாரசியங்கள் குவிந்து கிடக்கின்றன. அறிவியல் மாணவர்களுக்கு கிஃப்டாக   வழங்கவேண்டிய  அவசிய  நூல் இது.
  
THE VOICE OF AMERICA
Lowell Thomas and the Invention of 20th-Century Journalism
by Mitchell Stephens
336pp Rs. 1,730
Publisher: St. Martin’s 

டி.இ. லாரன்ஸின் அரேபிய பணிகளைப்  பற்றி  ரேடியோவில் அறிவித்த  முதல்  ரேடியோஜாக்கி லோவெல் தாமஸ்தான்.
இவருக்கு  கிடைத்த  முதல்வேலை  பற்றிய செய்தியோடு தொடங்கும் நூலில், அலாஸ்காவில் செய்தி சேகரிப்பு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், நியூயார்க் ஆகிய இடங்களில் நிகழ்த்திய சொற்பொழிவு அனுபவங்கள் அருமை.

அரபு புரட்சி பற்றிய தொகுப்பை தயாரித்து அதை சிபிஎஸ் 
டிவியில் ஒளிபரப்பி உலகப் புகழ்பெற்ற தாமஸ், அங்கு 46 ஆண்டு கள் பணிபுரிந்தார். லோவெல் தாமஸின் வாழ்வில் நடந்த 
சம்பவங்களை த்ரில் படம் போல சுவாரசியமாக,  நம்முன் வைக்கும் நூல் இது.