சூப்பர் லைட்டிங்குக்கு ஃப்ரீலைட்!வீட்டில் ஒவ்வொரு லைட்டிற்கும் ஒவ்வொரு ஸ்விட்சை போட ஸ்பைடர் மேனாக தாவிக்கொண்டிருந்தால் இந்த பிராட்பேண்ட் காலத்தில் வேலைக்காகுமா? அனைத்து லைட்டுகளையும் ஒரே கன்ட்ரோலில் இணைத்தால்.. அதுதான் ஃப்ரீலைட்.பிளக் பாயிண்டில் ஃப்ரீலைட் ட்ரான்ஸ்மிட்டரைப் பொருத்தி, ரிசீவரை லைட்டுகளுள்ள இடத்தில் பொருத்தி இணைத்துவிட்டால் வேலை முடிந்தது.

ஒரே ஸ்விட்ச் சில் அறையிலுள்ள அனைத்து லைட்டுகளையும் சிம்பிளாக கன்ட்ரோல் செய்யலாம். ஃப்ரீலைட் பயன்படுத்த எந்த மொபைல் ஆப்பும் அவசியமில்லை. தாம் தூம் செலவில்ஸ்மார்ட் டிவைஸ் வாங்க வேண்டியதில்லை.

ஏன், இதனைப் பொருத்த எலக்ட்ரீஷியன் கூட தேவையில்லை. எளிதாக எடுத்து பொருத்தி லைட்டோடு நீங்களே கனெக்ட் செய்யலாம். ரிசீவரை மற்றொரு பிளக்கில் பொருத்தி லைட்டோடு இணைத்தால் சிம்பிளாக அனைத்து விளக்குகளையும் திருவண்ணாமலை ஜோதியாக ஜொலிக்க வைக்கலாம். ஃப்ரீலைட்டின் விலை  ரூ.2,573.