உலகின் முதல் 3D ஹோலோகிராம் போன்!டிஜிட்டல் கேமரா தயாரிப்பாளரான ரெட் விரைவில் ஹோலோகிராம் முறையில் இயங்கும் தனது ஹைட்ரஜன் ஒன் என்ற போனை வெளியிட ரெடியாக உள்ளது. ரெட்டினா டிஸ்ப்ளே திரை கொண்டுள்ள ஹைட்ரஜன் ஒன் செல்போன், 2டி உருவங்களை 3டி முறையில் மாற்றும் திறன் கொண்டது என அதிரடியாக அறிவித்துள்ளது ரெட் நிறுவனம்.

இதில் ஸ்பெஷல், ஹோலோகிராம் உருவங்களை காண நாம் எந்த கண்ணாடியையும், ஹெட்செட்டையும் அணிய வேண்டியதில்லை  என்பதுதான். 5.7 இன்ச் திரையளவு கொண்ட ஆண்ட்ராய்டு போன் ஹைட்ரஜன் ஒன். 2018 இல் ரிலீசாகும் இப்போனின் விலை ரூ. 1,02,770.