அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!
மொழி
career - carrier
ரகு, தீவிர சிந்தனையில் இருந்தார். “வணக்கம் சார்...” என்றபடி ரவி அருகில் வந்து அமர்ந்தான். “சார்... உங்கக்கிட்ட பேசிக்கிட்டிருக்கிற நேரத்துல பெரிய தன்னம்பிக்கை வருது சார்... அதேநேரத்துல கொஞ்சம் வெட்கமாவும் இருக்கு. MBA படிச்சிருக்கேன். இருந்தாலும் ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்கனுன்னு தெரியலே...”- வருத்தமாக தொடங்கிய ரவியைப் பார்த்து புன்னகைத்தார் ரகு.
“ரவி... எதுக்காக இந்த தாழ்வு மனப்பான்மை. இது உங்களோட பிரச்னை மட்டுமில்லை. இந்தியாவோட ஒட்டுமொத்தப் பிரச்னை. கத்துக்கனுங்கிற மனோபாவம் வந்துட்ட பிறகு நீங்க வருத்தப்பட அவசியமில்லை...” என்று தோளில் தட்டினார் ரகு. “நீங்க சொல்றது சரி தான் சார்... நல்ல அனுபவமுள்ள ஒரு எஞ்சினியரே ‘பிளம்பர்... பிளம்பர்...’ (Plumber) ன்னு தான் உச்சரிக்கிறார். “அது ‘பிளம்பர்’ இல்லே சார்.. ‘பிளமர்’ ”-ன்னு சொன்னா ஒரு மாதிரி பார்க்கிறார்...” என்று சிரித்தான் ரவி.
“நாம தினசரி வாழ்க்கையில பயன்படுத்துற பல சொற்கள் இந்த மாதிரி silent lettered words-ஆ இருக்கு ரவி. உதாரணத்துக்கு career-ங்கிற வார்த்தையையும் carrier-ங்கிற வார்த்தையையும் எடுத்துக்கலாம். எல்லாரும் இந்த ெரண்டு வார்த்தைகளையும் ஒரே மாதிரிதான் உச்சரிக்கிறாங்க. அது தவறு.
‘career’-ஐ ‘கரியர்’-ன்னும் ‘carrier’-ஐ ‘கேரியர்’-ன்னும் உச்சரிக்கணும். ‘நீங்க ஒரு சமையல்காரர்... உங்க ‘career’ என்ன?’ன்னு கேட்டா ‘ஷெஃப்’-ன்னு சொல்லனும். ‘ச்செஃப்’-ன்னு சொல்லக்கூடாது. அதுமட்டுமில்ல. avalanche, brochure, cache, chagrin, charade, chauvinism, champagne, machine, moustache, sachet போன்ற வார்த்தைகள்ல வர்ற ‘ch’க்கு ‘ஷ்’-ங்கிற உச்சரிப்பு தான் வரும்...”
“ஓ... நான் இதுவரைக்கும் ப்ராச்சர், முஸ்டாச், சாச்செட்-ன்னு தான் உச்சரிச்சிட்டு இருந்தேன்...” என்றான் ரவி.“மீசையை moustache-ன்னு சொல்லுவோம். இதை ‘மஸ்டாஷ்’-ன்னு உச்சரிக்கனும்...”
“ஓ.கே. சார்... ஒரு Request... என் அக்கா பையனுக்கு நம் நிர்வாகம் நடத்துற ஸ்கூல்ல LKG சீட் வேணும் சார்... நீங்க ஒரு வார்த்தை சொன்னா கிடைச்சுடும்...”- என்று கிடைத்த இடைவெளியில் அப்ளிகேஷனைப் போட்டான் ரவி. சிரித்த ரகு, \\ரவி... கண்டிப்பா பரிந்துரை செய்றேன். ஆனா, என் கேள்விக்கு நீ சரியா பதில் சொல்லனும்...” என்று பீடிகை போட்டார். விழித்தான் ரவி.
“LKG-யோட விரிவாக்கம் என்ன?” பட்டென்று சொன்னான் ரவி...“ ‘Lower Kinder garden’ பளீரென்று சிரித்தார் ரகு. ‘லோயர் கிண்டர் கார்டன்’ (Lower Kinder garden) இல்லை ரவி... ‘லோயர் கிண்டர் கார்ட்டன்’ (Lower Kinder garten). ‘ட்’ அழுத்தமாச் சொல்லனும்..
இது ஒரு ஜெர்மானிய வார்த்தை. Kinder-ன்னா குழந்தை, Garten-ன்னா தோட்டம்...” என்று சிரித்தார் ரகு. சார்... இதுவரைக்கும் garten-னுக்கு ‘குண்டு டீ’-ன்னு வரும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ‘குச்சி டி’ வரும் நீங்க சொல்லித்தான் தெரிஞ்சுக்கிட்டேன்...” என்ற ரவியை விநோதமாகப் பார்த்தார் ரகு. “அதென்ன ரவி… ‘குண்டு டீ’, ‘குச்சி டி’?”
“ஸீ-க்கு பக்கத்துல வர்ற ‘டீ’, ‘குண்டு டீ’. ‘எஸ்’-க்குப் பக்கத்துல வர்ற டி ‘குச்சி டி’...” என்றான் ரவி. மீண்டும் சிரித்த ரகு, “அப்படி சொல்றது தப்பு ரவி... ஏன் தப்புன்னு அடுத்த இதழ்ல்ல சொல்றேன்...” என்றவாறு எழுந்து எம்.டி. அறைநோக்கி நடந்தார் ரகு.
சேலம் ப.சுந்தர்ராஜ்
|