கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் B.V.Sc.,A.H., B.Tech படிக்க விண்ணப்பிக்கலாம்
+2க்குப் பிறகு...
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamilnadu Veterinary and Animal Sciences University) கீழ் செயல்பட்டு வரும் அரசுக் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் B.V.Sc&A.H என்ற படிப்பு வழங்கப்படுகிறது.
இப்படிப்பில் மொத்தம் 320 இடங்கள் இருக்கின்றன. சென்னை, கோடுவளியில் செயல்படும் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் B.Tech-Food Technology (20 இடங்கள்), Dairy Technology (20 இடங்கள்) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஓசூரில் செயல்படும் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் B.Tech-Poultry Technology (20 இடங்கள்) எனும் படிப்பு வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் இப்படிப்புகளில் சேரலாம்? தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராக இருக்க வேண்டும். 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பிற மாநிலங்களில் படித்தவர்களாக இருந்தால் பிறப்பிடச் சான்றிதழ் இணைக்க வேண்டும்.
பொதுப்பிரிவினர் இரண்டு அமர்வு களுக்குள்ளும் (Attempt), எஸ்சி, எஸ்டி பிரிவினர் மூன்று அமர்வுகளுக்குள்ளும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் சேர எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு ஏதுமில்லை. பிற பிரிவினர்களுக்கு 1-7-2016 அன்று 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பம்www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரே விண்ணப்பத்தில் தேவையான பாடப்பிரிவைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.
பட்டப்படிப்பு ஒவ்வொன்றிற்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300, பிற பிரிவினர் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக இணையத்திலேயே செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை இணையத்தில் 10.6.2016 மாலை 6.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவுடன் அவர்களுடைய மொபைலுக்கு குறுந்தகவலும், இமெயிலுக்கு செய்தியும் அனுப்பப்படும். அதன் பின்னர் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினைத் தரவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்களுடன் “தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலைப் பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை -600 051” எனும் முகவரிக்கு 17.6.2016 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
+2 தேர்வில் மேற்காணும் பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இச்சேர்க்கையில் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். கூடுதல் விவரங்களுக்கு மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது 044-25551586044-25551586, 25554555 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-தேனி மு.சுப்பிரமணி
|