நம்பிக்கை ஊட்டுகிறது!
வாசகர் கடிதம்
சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சரண்யாவின் பேட்டி உற்சாக டானிக்காக இருந்தது. கடந்த சில வருடங்களாக அடித்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதிப்பது நம்பிக்கை ஊட்டுகிறது. -செ.ம.ஜெயமுகிலன், கோவை
அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு குறித்த தகவல்கள், அத்தனை சந்தேகங்களையும் போக்குவதாக இருந்தன. சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான டைமிங் அலாரமாக கட்டுரை எழுதி மாணவர்களுக்கு உதவும் கல்வி வேலை வழிகாட்டி இதழின் பணி மேன்மைக்குரியது. -க.முத்துமீனாள், மதுரை.
புற்றீசல் போல பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் மார்க் தவிர்த்து பணித்தகுதி மேம்பட மென்திறன்களை வளர்த்துக்கொண்டால் வேலை நிச்சயம் என்ற நம்பிக்கையை நவநீதகிருஷ்ணன் கட்டுரை சுளீர் என உணர்த்தி கவனம் ஈர்க்கிறது. ஆசிரியர்கள் கம்பு விடுத்து, மாணவர்களின் மனம் படிக்கும் நல்மேய்ப்பர்களாக வலம் வர தன் பணி தாண்டியும் கற்கவேண்டும் என உணர்த்தும் இரா.நடராசனின் தொடர் அருமை. -க.ஜா.சுகவனராஜன், புதுச்சேரி.
லெவிஸ் ஸ்ட்ராஸின் ஜீன்ஸ் பற்றிய அறிமுகத்தோடு கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை விதிகளை சுட்டிக்காட்டியது செம பிரைட் அண்ட் ஸ்வீட் ஐடியா! -கே. மார்டீன் ஜோஸியா, திருவள்ளூர்.
எழுத்துத் தேர்வுக்கு மிகச்சிறப்பான வழிகாட்டி நெல்லை கவிநேசனின் தொடர் என்றால் மிகையல்ல. எளிய உரையாடலில் ஆங்கிலம் கற்பது இவ்வளவு ஈஸியா என தொடரின் தலைப்பு போலவே சர்ப்ரைஸ் சந்தோஷம் தருகிறது ப.சுந்தர்ராஜ் எழுதும் தொடர். -கே.எம்.கவிமுருகு முத்தையா, தூத்துக்குடி.
|